Puttalam Online
puttalam-news

அன்னையோடு சேரும் பழைய மாணவிகள்

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் – புத்தளம்]

logo-small2தாம் படித்த பாடசாலைக்கு, தமது வாழ்க்கைக்கு வித்திட்ட அன்னைக்கு நேசக்கரம் நீட்டும், கைமாறு செய்யும் நோக்கோடு பாடசாலையில் அந்தந்த காலப்பகுதியில் வெளியேறிய மாணவர்கள் அமைப்பு ரீதியாக உருவாகி அதனோடு சமூக சேவைகளிலும் இணைகின்றனர். இதுதான் புத்தளத்தின் அண்மைக்கால போக்கு.

ஓரிருவரின், ஒரு குழுவின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு கலாச்சாரம், சமூக சேவை நோக்கம் படிப்படியாக பல மாணவர்கள் மத்தியில் ஊன்றப்பட்டு அவர்களும் இவ்வமைப்பு காலாச்சாரத்தில் தம்மை இணைத்து சமூக சேவையில் துடிப்பாக இயங்குவது மாற்றத்தின் தேவையாக கருதப்படுகிறது.

அந்தவகையில் தமது அன்னையின் வளர்ச்சியில் தாமும் பங்குகொள்ள வேண்டுமென்று பாத்திமாவின் பழைய மாணவிகளும் முன்வந்திருப்பதானது ஒரு முயற்சியின் அடையாளமாகும்.

ஆண்களை பொறுத்தவரை எவ்வகையான சூழலிலும் தம்மை இணைத்து அதற்கு தகுந்தாற்போல் பணிகளில், சமூகத்தேவைகளில் இணைய முடியும். ஆனால் பெண்களை பொருத்தமட்டில் வீட்டு சூழல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். தந்தை, சகோதர்கள் மற்றும் கணவன் என்பவற்றுக்கு அப்பால் சமூகத்திற்கு வருவதென்பது வரவேற்கப்பட வேண்டியதொரு அம்சமாக இருக்கிறது.

தமது வாழ்கையின் அத்திவாரமாய், கல்வி தந்த ஆலமாரமாய் இருந்து உயர்த்திவிட்ட பாத்திமா அன்னையின் முத்துக்கள் ஒன்று சேர்ந்து பழைய மாணவ அமைப்பை ஆரம்பித்து மற்ற மாணவர்களுக்கு வழிகாட்டி இருக்கின்றனர்.

மகளிர் தினத்தோடு சந்தோஷமாக விளையாட்டு போட்டிகளோடு ஆரம்பித்து இருக்கிறது அமைப்பின் முதலாவது செயற்றிட்டம். தமது வீட்டுவேலைகளுக்கு அப்பால் எல்லோரையும் இணைத்து வேலைபகிர்வுகளை செய்து ஒழுங்கமைப்பது என்பது இலகுவான காரியமல்ல.

Gate1இருந்தபோதும் தம்மால் ஆன, தமது கொள்ளளவுக்கேற்ப இவ்விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்து ஒட்டுமொத்த மாணவிகள் என்றில்லாவிட்டாலும் மாணவிகளை மறுப்படியும் மாணவிகளாக இணைக்கும் முயற்சி அவ்வமைப்புக்கு சாரும்.

இதனோடு நில்லாமல் தமது பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல உறுதிக்கொள்ள வேண்டியது கடமையாகிறது. எமது கல்லூரி, எமது சொத்து இதனை பாதுகாப்பது எமது கடமை. கல்வித்துறையில், பரீட்சைகளில் வெற்றிபெறும் விகிதம் தளம்பல் நிலையை தாண்டி கொண்டு செல்லப்பட வேண்டும்.

பாடசாலைகளில் இடைநடுவே விலகிசெல்லும் மாணவிகளின் காரணங்கள் கண்டறியப்பட்டு அதற்கு வழிசெய்யப்பட வேண்டும். பாடசாலையின் முன்னேற்றதிற்கு ஆலோசனைகள் புரிய வேண்டும். மாற்றமாக பாடசாலையின் பெயரிற்கு ஏற்படும் கலங்கம், பாடசாலைக்கு வரும் முறைப்பாடுகளுக்கு எல்லாம் தகுந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கும் போது இதன் உருவாக்கம் மிகுந்த பயனுடையதாக அமையும்.

மூத்த அனுபவசாலிகளுடன் இளம் சிந்தனையாளர்களும் இணையும் போது அங்கு வெற்றிகரமான மாற்றத்தை ஏற்படுத்தலாம். விவேகமான தீர்மானங்கள் வேகமாக முன்னெடுக்கப்படுமானால் பயணம் இனியதே.

பழைய மாணவிகள் – வாழ்க்கையின் அத்திவாரம் – முயற்சியின் அடையாளம்…


2 thoughts on “அன்னையோடு சேரும் பழைய மாணவிகள்

 1. Wasim Akram MAB says:

  ஜெசாகல்லாஹ்.. உங்கள் கருத்திற்கு

  எண்ணங்களை பொறுத்தே இறைவனிடத்தில் கூலி தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் எண்ணங்களை இறைவன் பொருந்திகொள்வானாக. அந்தவகையில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.

 2. Umu zara says:

  பாத்திமாவின் புதல்வி

  பல பிரச்சினைகளுக்கு மத்தியில் கால ஓட்டத்தில் கலந்திட்ட சமூகமாற்றத்திற்கு ஏதாவது செய்ய ஆசைப்படுகின்ற ….
  சமூகம் என்பதை விட பாடசாலைக்கு மட்டுமாவது சிறு தேவைகளையாவது நிவர்த்தி செய்ய துடிக்கும் எம்மைப்போன்ற பலர் எம்மத்தியில் இல்லாமல் இல்லை. பெண்களுக்கும் நமது பாடசாலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு உண்டு என்பதை வலியுறுத்திய உங்களுக்கு பெண்கள் சார்பில் நன்றிகள் பல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All