Puttalam Online
puttalam-news

பாத்திமாவின் சாதனையில் நாமும் பங்காளராவோம்

  • 9 April 2014
  • 1,218 views

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் – புத்தளம்]

logo-small2இலங்கை கல்வி திட்டத்தில் பரீட்சைகள் பாரிய பங்குவகின்றன. அந்தவகையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரணத் தரப்பரீட்சை, மற்றும் க.பொ.த. உயர் தரப்பரீட்சை என மூன்று முக்கிய கட்டங்கள் மாணவர்களின் திறமைக்கு சவால் விடுக்கின்றன.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெற்றோர்களின் பரீட்சை, க.பொ.த. சாதாரணத் தரப்பரிட்சை ஆசிரியர்களின் பரீட்சை, க.பொ.த. உயர் தரப்பரிட்சை மாணவர்களின் பரீட்சை என்று பொதுவாக மக்கள் வர்ணித்தாலும் எல்லாப் பரீட்சைகளுக்கும் மாணவர்களே முகம் கொடுக்கவேண்டும்.

அத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே க.பொ.த. சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் இப்போது வரும் அப்போது வரும் என்று பெரும் அல்லோலப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறது.

புத்தளம் பிரதேச பாடசாலைகளுக்கிடையே புத்தளம் பாத்திமா மகளிர் பாடசாலை ஒரு மாபெரும் சாதனையை புரிந்துவிட்டு அமைதியாக இருக்கிறது. அங்கு பரீட்சை எழுதிய மாணவிகளில் ஏழு பேர் அனைத்துப்பாடங்களிலும் அதி திறமை சித்தி (9As) பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிலும் ஒரு மாணவி ஆங்கில மொழி மூலத்தில் 9As பெற்றிருப்பது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.

தமிழ் மொழிமூலம், ஆங்கில மொழிமூலம் மற்றும் சிங்கள மொழிமூலம் என மூன்று பிரிவுளை கொண்டு புத்தளம் பிரதேசத்தில் கல்வியினை வழங்கும் பாத்திமாவில் சிங்கள மொழிமூலம் பரீட்சையில் ஆறு பாடங்களில் அதிதிறமை சித்தியினை பெற்றுள்ள அதேவேளை ஆங்கில மொழிமூலம் பரீட்சையில் ஐந்து பாடங்களில் அதிதிறமை சித்தியினை பெற்ற மாணவிகள் ஐவரும், தமிழ் மொழிமூலம் பரீட்சையில் ஐந்து பாடங்களில் அதிதிறமை சித்தியினை பெற்ற மாணவிகள் இருபத்துதெட்டு பேர்களும் என்பது ஒரு மாபெரும் வெற்றியல்லவா..

Monumentஐம்பது வருட வரலாற்றை கடந்து பயணிக்கும் பாத்திமாவின் அதிபர் சுமையா ரிஸ்வான் அவர்களின் பங்கும், பாடசாலையின் ஆசிரியர்கள் குழாம், பெற்றோர்கள் ஆகியோரும் பங்கும் இன்றிமையாததாகும்.

பாடசாலையின் முழு நிர்வாகப் பொறுப்பையும் தலைமை தாங்கி செயற்படுத்தும் இவர் மாணவிகளுக்கு முன்மாதிரி மிக்க ஒருவராகவும், பல்வேறுப்பட்ட தலைமைத்துவ பண்புகளால் மாணவிகள், ஆசிரியர்களை அரவணைத்து செல்லும் ஒருவராகவும் இருப்பதற்கு இப்பெறுபேறுகள் ஒரு சான்றாகும்.

இதனோடு இணைந்து பாடசாலையின் ஆசிரியர் குழாமும் இவர்களுடைய பெறுபேற்றை உயர்த்த அயாராது பாடுப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு பிள்ளையும் தம் பிள்ளையாக நினைத்து, அவர்களுக்கு விளங்காத பாடங்களை அவர்களுக்கு விளங்கக்கூடிய பாணியில் சுகமாக எடுத்துரைக்கும் இவர்கள் பாடசாலைகளில் மாலை நேர வகுப்புக்கள் ஏற்படுத்தி செய்த தியாகங்களுக்கு இன்று வெற்றி கிடைத்திருக்கிறது.

இவ்வெற்றியின் மற்றொரு சாரார் பெற்றோர்கள். தம் பிள்ளை நன்றாக படித்து சமூகத்தில் நற்பிரஜையாக வேண்டும் என்ற ஆர்வத்திலும், தாம் கற்காத கல்வி தம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் பெற்றோர் படும் துன்பம் எண்ணில் அடங்காது.

மேலதிக வகுப்புக்களில் தொடங்கி விரும்பிய அனைத்து விடயங்களையும் செய்யும் பெற்றோருக்கு பிள்ளை இச்சந்தோஷத்தை வழங்க ஆனந்த கண்ணீரோடு அதை உள்வாங்கி கொள்ளும் பெற்றோருக்கு இப்பெறுபேறுகள் ஒரு சலூட்.

இவர்களை எல்லாம் தாண்டி அப்பிள்ளையின் விடாமுயற்சியும், கல்வி மீது கொண்ட ஈர்பாலுமே இச்சாதனைகள் இன்று கொடிக்கட்டி பறக்கின்றன. இவர்களது இந்த மாபெரும் சாதனையில் நாமும் பங்காளர்களாக இணைய வேண்டும். எதிர்மறையான கருத்துக்கள் களையப்பட வேண்டும்.

விடாமுயற்சி, சுயக்கற்றல், கல்வி மீது ஆர்வம் என்பன ஒவ்வொரு மாணவர்களுக்கும் கட்டாயம் தேவையானது. அப்போதுதான் எந்தவொரு சவால்களையும் இலகுவாக தாண்டமுடியும். வெற்றிவாகை சூடமுடியும். அதேநேரம் எமக்கு இக்கல்வி ஞானத்தை வழங்கிய இறைவனை நாம் மறந்துவிடலாகாது. அவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். என்றும் அவனது நாட்டப்படியே செயல்கள் நடக்கின்றன, நடக்கும். எமக்கு வழங்கிய இக்கல்வி அருக்கொடைகளுக்கு நன்றி கூறி கல்வியில் நிலைக்கொள்வோம், சாதிப்போம்.

க.பொ.த. சாதாரணத் தரப்பரிட்சை – பாத்திமா – வரலாறு..


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All