Puttalam Online
star-person

புத்தளம் அல்மத்ரஸத்துல் காஸிமிய்யாவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் மஹ்மூத் ஹஸரத்

 • மூல கட்டுரையாளர் : மர்ஹூம் A.R.M. புஆத் -ஆலிம் (பஹ்ஜி)
 • செம்மையாக்கம் :  S.I.M. அக்ரம்(காஸிமி)

—————————————————————–

காஸிமிய்யா அரபுக் கல்லூரி வடமேல் மாகாணத்தின் புத்தளம் நகரில் இலங்கையின் முதல் அரபுக் கல்லூரியாக 10.01.1884 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மார்க்கக் கல்வியையும் அரபு மொழியையும் கற்பிப்பதன் மூலம் அவர்களை இஸ்லாத்தின் மூலாதாரங்களாகிய அல்குர்ஆன் அல்ஹதீஸ் ஆகியவற்றை விளங்கச் செய்வதும் அதன்படி ஒழுகச் செய்வதும் இதன் பிரதான நோக்கமாகும்.

——————————————————————————————————————————–

CASIMIYYA OGOபுத்தளம் மன்னார் வீதியில் மரைக்கார்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஐதுரூஸ் மரைக்கார் அவர்கள் ஹிஜ்ரி 1302 (கி. பி. 1881) இல் ஒரு மஸ்ஜிதை நிறுவினார். இப்பள்ளிவாசல் இன்றும் ஐதுரூஸ் பள்ளிவாசல் என அழைக்கப்படுகின்றது.

காஸிமிய்யா அரபுக் கல்லூரி இந்த ஐதுரூஸ் பள்ளிவாசலின் வெளித் திண்ணையிலேயே மலர்ந்தது. காயல்பட்டணத்தைச் சேர்ந்த ‘மிஸ்கீன் ஆலிம்’ என்பவர் 1884 ல் முதன்மை உஸ்தாதாக அமைந்து இம்மத்ரஸாவை நான்கு ஆண்டுகள் நடாத்தினார். பின்னர் அவர்கள் தாயகம் சென்றதால் மத்ரஸா இரண்டு ஆண்டுகள் ஸ்தம்பித நிலையை அடைந்தது.

பின்னர் தமிழ்நாடு அதிராம் பட்டினம் யூசுப் ஆலிம் அவர்கள் வருகை தந்து மத்ரஸாவைப் Casimmiyahபொறுப்பேற்று 1897 வரை நடாத்தினார். அவர்களும் தாயகம் செல்லவே மத்ரஸா ஐந்து ஆண்டுகள் நடைபெறாதிருந்தது. இதன் பின்னர் 1918 ஆம் ஆண்டு வரையும் மத்ரஸா நடைபெறவில்லை.

1918 ஆம் ஆண்டிலே, புத்தளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் காயல்பட்டணத்திலே ஓதிப் பட்டம் பெற்றவருமான மெளலவி சேகு இப்றாஹீம் அவர்கள் மத்ரஸாவைப் பொறுப்பேற்று நடாத்தினார்.

1920 ல் லக்னோவில் படித்து ‘மெளலவி பாஸில்’ பட்டமும் ‘ஹக்கீமுல் யூனானி’ என்ற மருத்துவப் பட்டமும் பெற்றவரும், புத்தளத்தைச் சேர்ந்தவரும் “சித்தங்குட்டி ஆலிம்’ என்று அழைக்கப்பட்டவருமான முகம்மது அபூபக்கர் ஹஸரத் போதனாசிரியராக சேர்ந்தார். இவர் பிற்காலத்திலே  காத்தான்குடியிலே குடியேறி இறுதி வரை அங்கேயே வாழ்ந்து மறைந்தார்.

அபூபக்கர் ஹஸரத் அவர்களுக்குப் பின்னர் இம்மத்ரஸாவிலே 1935 ல் வெலிகமையைச் சேர்ந்த ஹுஸைன் ஆலிம் அவர்களும், 1937 ல் வேலூர் ஹுஸைன் லெப்பை ஆலிம் அவர்களும் பின்பு அதிராம்பட்டினம் பாக்கீர் ஆலிம் அவர்களும், நிந்தவூரைச் சேர்ந்த இஸ்மாயில் ஆலிம் அவர்களும் 1942 ஆண்டுவரை கடமை ஆற்றினர்.

மத்ரஸாவின் தற்போதைய முகாமையாளர் முகம்மது காசிம் மரைக்கார் ஆவார். இவரின் தந்தை இப்றாஹீம் நெய்னா மரைக்கார். இவரின் தந்தை முஹம்மது காசிம் மரைக்கார். இவர் 1922 ஆம் ஆண்டிலே தற்போது மத்ரஸா அமைந்துள்ள 6 ஏக்கர் விசாலமான காணியையும், முந்தல், தாண்டிக்குறிச்சி என்னும் இடத்தில் அமைந்துள்ள 125 ஏக்கர் தென்னங் காணியையும் மத்ரஸாவுக்காக அறக்கட்டளை எழுதி ‘வக்பு’ செய்தார்.

எனவேதான் அப்பெருமகனின் பெயரால் இம்மத்ரஸா ‘அல்மத்ரஸதுல் காஸிமிய்யா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம் மத்ரஸாவுக்காக கரைத்தீவு, ஆலம் வில்லு என்ற இடத்தி லுள்ள 100 ஏக்கர் தென்னங் காணியும் அண்ணாவிச்சேனை என்னும் 42 ஏக் கர் தென்னங்காணியும் வக்பு செய்யப்பட்டன.

மத்ரஸாவின்   முன்னாள் முகாமையாளர் இப்றாஹீம் நெய்னா மரைக்கார் காலமானபோது,Casimiyya-Old-1 அவரது மகன் முகம்மது காசிம் மரைக்கார் சிறுவராக இருந்தார். எனவே அன்னாரின் தாய்மாமன் PT மஹ்மூது முகாமையாளராகக் கடமையாற்றினார். பின் இவரின் சகோதரர் PT இப்றாஹீம் ஹாஜியார் முகாமைப் பொறுப்பை ஏற்றார். இவரின் காலத்தில் மத்ரஸா கட்டப்பட்டு 1950 ல் திறந்துவைக்கப்பட்டது. இவர்களின் பின் 1951 ஆம் ஆண்டு முகாமைத்துவப் பொறுப்பை காசிம் மரைக்கார் ஏற்று வபாத் ஆகும் வரை செயற்பட்டு வந்தார் .

1957 ல் இம்மத்ரஸா கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்டது.

MAHMOOD AALIM 243 ஆண்டுகள் இம்மத்ரஸாவின் ஜீவ நாடியாக மிளிர்ந்த மஹ்மூத் ஹஸரத் அவர்களைப் பற்றி சிறிது அறிமுகம் செய்யாதவரை “அல்மத்ரஸதுல் காஸிமிய்யாவின்” தோற்றமும் வளர்ச்சியும் எனும் இச்சிறு கட்டுரை நிறைவு பெற்றதாக கருத முடியாது. புத்தளம் அரசாங்கப் பாடசாலையிலே 8 ஆம் வகுப்பு சித்தியடைந்த இவர்கள் இம்மத்ரஸாவிலே அபூபக்கர் ஹஸரத் அவர்களிடம் மார்க்கக் கல்வியை ஆரம்பித்தார். பின் இங்கு கடமையாற் றிய அதிராம்பட்டினம் பாக்கிர் ஆலிம் அவர்கள், மஹ்மூத் ஹஸரத் அவர்களை உயர் கல்விக்காக இந்தியாவுக்கு அழைத்துச் சென்றார்.

1936 தொடக்கம் 1942 வரை அதிராம் பட்டினம், சென்னை, வேலூர் ஆகிய இடங்களிலுள்ள மத்ரஸாக்களில் உயர்கல்வி கற்று புத்தளம் திரும்பிய மஹ்மூது ஹஸரத் அவர்களிடம் 1942 ஆம் ஆண்டு மத்ரஸா ஒப்படைக்கப்பட்டது.

அன்னாரின் பதவிக் காலத்தை காஸிமிய்யா மத்ரஸாவின் பொற்காலம் என்று கூறலாம். மத்ரஸாவுக்கு பொருளாதாரச் சிக்கல்கள் வரும்போதெல்லாம் தனது உடைமைகளையும், தன் மனைவியின்ஆபரணங்களையும் விற்று சீர் செய்வார்.

மாணவர்களின் ஒழுக்க விஷயத்திலே கண்டிப்புடன் செயற்பட்டார்கள். பணிவையே பூஷணமாகக் கொண்ட இவர் தன்னை நாடி வரும் ஏழை எளியோருக்குத் தன்னிடம் இருப்பதை எண்ணியும் பாராது ஈந்துவக்கும் ஈகையாளர். நள்ளிரவுகளிலே தனித்திருந்து வணக்கம் செலுத்துவது இவர்களின் வழக்கம். அன்னாரோடு பழகிய அனைவரும் அன்னாரை ஒரு ‘வலியுல்லாஹ்’ என்று கூறினர்.

Abdullah.psd_வாழ்வின் இறுதிக் காலத்திலே நோயினால் பீடிக்கப்பட்டார். இந்த நிலையிலும் வண்டியில் அமர்ந்து மத்ரஸாவுக்கு வந்து பாடம் நடத்துவார். மத்ரஸாவிலேயே தங்கி இருந்தும் போதித்து வந்தார். மஹ்மூத் ஹஸரத் அவர்களின் ஆயுட்காலம் முழுவதுமே மத்ரஸாவின் வளர்ச்சிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது.

மஹ்மூத் ஹஸரத் அவர்களின் மறைவின் பின் அன்னாரின் உடன் பிறந்த தம்பி மெளலவி ஷேய்க் மதார் ஹஸரத் (பாகவி) அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்றார். அன்னாரும் மத்ரஸாவின் பொருளாதாரம், கல்வி, ஒழுக்கம் முதலியவற்றில் அதிக ஈடுபாடு காட்டி இம்மத்ரஸாவை திறம்பட நிர்வகித்தார். இவ்வாறு இவர் நான்கு ஆண்டுகள் கடமையாற்றி 1989.06.10 ஆம் திகதி காலமானார்.

மறைந்த முதல்வர் மஹ்மூத் ஆலிம் அவர்களின் கனிஷ்ட புதல்வரான மெளலவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் மாண்புமிகு மதீனா மாநகரில் உயர் கல்வி பெற்று இம்மத்ரஸாவில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

casimiyyaசிறிய தந்தையின் மறைவின் பின்பு மத்ரஸாவின்1779959_262687280564363_1694985028_n அதிபர் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று வரை திறம்பட நிர்வகித்து வருகின்றார்.

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய மஹ்மூத் அப்துல் மஜீத் அவர்களை நினைவு கூருமுகமாக இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் ரூபா 5.00 பெறுமதி யான புதிய தபால் முத்திரை ஒன்று 2009 ஆம் ஆண்டு யூலை மாதம் 25 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது.

VAT

 


One thought on “புத்தளம் அல்மத்ரஸத்துல் காஸிமிய்யாவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் மஹ்மூத் ஹஸரத்

 1. அஸ்ஸலாமு அலைக்கும்.

  என் பெயர் ‘அஹ்மத்’. ஊரின் பெயரான ‘அதிராம்பட்டினம்’ என்பதன் சுருக்கமான ‘அதிரை’ என்பதை என்னுடைய பெயருடன் சேர்த்து, ‘அதிரை அஹ்மத்’ என்று புனைபெயராக்கி, மார்க்கம் மற்றும் இலக்கிய எழுத்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.

  என் வாப்பா பாக்கிர் ஆலிம் அவர்கள் புத்தளம் காசிமிய்யா மதரசாவில் உஸ்தாதாகப் பணியாற்றியுள்ளார்கள் என்று பல்லாண்டுகளுக்கு முன் என் உம்மா வழியாகக் கேட்டுள்ளேன். ஆனால், தந்தையார் இறந்தபோது, என் வயது 3 க்குள் தான் இருக்குமாம்; என் உம்மா சொன்னார்கள். அதனால், என் தந்தையாரின் தோற்றம் (உருவம்) பற்றி எனக்கு அறிவில்லை.

  இதற்கு முன், புத்தளத்தைச் சேர்ந்த அப்பாஸ் என்பவருக்கு மின்னஞ்சல் அனுப்பி, வாப்பாவைப் பற்றிய ஏதாவது தகவகள், புகைப்படம், ஆவணங்கள் மத்ரஸாவிலிருந்து கிடைக்குமா என்று கேட்டிருந்தேன். வாய்ப்புக் கிட்டவில்லை.

  அதனால், இந்த வலைத்தளத்தின் மூலம் என் வேட்கையினை வெளிப்படுத்துகின்றேன். உதவி செய்வீர்களா? வஸ்ஸலாம்.

  அன்புடன்,
  அதிரை அஹ்மத்
  email : adiraiahmad@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All