Puttalam Online
puttalam-news

பிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல் II

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்.)

பிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல்.

நாட்டுக்கு பிறையை அறிவித்து இஸ்லாமிய மாதம் தொடங்குவதை அறிவிக்கும் பொறுப்பை எடுத்துள்ளவர்கள் மாதா மாதம் மிகப்பிழையான திகதியை அறிவித்து வருகின்றனர். இக்குறைபாட்டையும் கூட நாம் பலமுறை எடுத்துக்காட்டி வந்துள்ளோம். அவர்கள் அதனை ஏற்பதாகவோ அல்லது தங்கள் நிலைப்பாட்டுக்கு ஷரிஆ ரீதியான ஆதாரங்களை முன்வைத்து நிறுவ முன்வருவதாகவோ இல்லை. இப்பிழையான அறிவிப்பு எத்தகையது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள கூடியவாறு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வழிகாட்டலையும் இன்ஷா  அல்லாஹ் இம்மாதம் ஏற்படும் அத்தாட்சியையும் இம்மடலின் இறுதியில் தர இருக்கின்றோம்.

அதிகாரம் பெற்ற மேற்படி குழுவின் நிலைப்பாட்டால் வருடந்தோறும் நோன்பை ஆரம்பிப்பதிலும், பெருநாட்களைத் தீர்மானிப்பதிலும் சர்ச்சைப்படுவதை நாம் நன்கறிந்தே இருக்கின்றோம். சர்ச்சைகள் முற்றி தவிர்க்க முடியாத நிலை வரும்போது, இருநாட்களில் பெருநாட்கள் கொண்டாடவும் அனுமதி வழங்கப்படுகின்றது. இது ஷரிஆ அங்கீகரித்த வழிமுறைதானா? றசூல் (ஸல்) அவர்கள் எங்களை விட்டுச்சென்ற தெட்டத்தெளிவான பாதை அதன் இரவும் பகல் போன்று பிரகாசிக்கும். பாதை இதுதானா? (பார்க்க – அல்குர்ஆன் 5:3, ஹதீஸ் முஸ்னத் அஹமத் : 16813)

 பொறுப்பை சுமந்துள்ள குழுவும், நாடறிந்த உலமா பெருந்தகைகளும் இதற்கு என்ன நியாயம் கற்பிப்பார்கள். பூமிக்கு நிலவு ஒன்றே! அல்லாஹ் அதன் ஒவ்வொரு படித்தரத்தையும், ஒவ்வொரு நாளுக்கு நிர்ணயித்து காலண்டரை அறிவித்துவிட்டான். (பார்க்க அல்குர்ஆன் – 02:189, 10:05, 36:39) இந்நிலையில் உள்நாட்டுப் பிறை, வெளிநாட்டுப் பிறை, சர்வதேசப் பிறை என அர்த்தமற்ற மரபு ரீதியான வாதப் பிரதிவாதங்களையே எல்லா மட்டங்களிலும் பேசி யதார்த்தங்களை விளங்கிக்கொள்ள தாமும் முற்படாது மற்றவர்களும் விளங்கிப் பின்பற்ற தடையாக இருந்து வருகிறீர்கள்.

 உரிய தினத்தில்தான் உரிய இபாதத்தை செய்ய வேண்டும். அப்போதுதான் அது நிறைவேறும். அல்லாஹ் நிர்ணயித்த தினத்தை விட்டுவிட்டு யாரோ நிர்ணயித்த தினத்தில் நிறைவேற்றுவது இபாதத் ஆகுமா? உ+ம்  றமழான் முதல் பிறையில் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் (அல்குர்ஆன் – 2:185) ஷவ்வால் முதல் பிறையில் பெருநாள் கொண்டாடப்பட வேண்டும் இதில் றசூல் (ஸல்) அவர்களோ! ஸஹாப்பாப் பெருமக்களோ! தவறியதாக வரலாறு உண்டா? இல்லவே இல்லை. அல்லாஹ் உலகைப் படைத்த போதே நிர்ணயித்த தினத்தைவிட்டுவிட்டு தாம நினைத்த ஒரு தினத்தை மக்களுக்கு அறிவிக்க அல்லாஹ் யாருக்கு அதிகாரம் அளிக்கவில்லையென்பதை எமது ஈமானே எமக்கு சாட்சிபகரும். சிந்திப்பார்களா?

 குறிப்பு : மேற்குறிப்பிடப்பட்ட அல்லாஹ்வின் வழிகாட்டல் இதுதான். இம்மாதம் 2014/04/28ந் திகதி திங்கட் கிழமை பஜ்ரின் பின் கிழக்கு வானை கவனித்துப் பாருங்கள். ஜமாஅத்துல் ஆகிர் மாத பிறையின் இறுதி வடிவம்  உர்ஜுனுல் கதீம் (குர்ஆன் கூறும் பெயர்) 36:39 தெரியும். சூரியன் உதித்ததும் மறைந்துவிடும். அடுத்தநாள் 2014/04/29 செவ்வாய்கிழமை அமாவசை ஜமாஅத்துல் ஆகிர் 30 நாளாகப் பூர்த்தியடையும். 2014/04/30 றஜப் மாத முதல் நாளாகும். அது புதன் கிழமை. (பார்க்க ஹதீஸ 1789 இப்னு ஹுசைமா)

 அல்லாஹ்வின் அத்தாட்சி இதுதான் 2014/04/29 அமாவாசையன்று சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. எப்போது; சூரிய கிரகணம் அமாவாசை (சங்கம)நாளில்தான் ஏற்படும் இது அல்லாஹ்வின் ஏற்பாடு இந்த பிரபஞ்ச அத்தாட்சிகளை யார்தான பொய்ப்பிக்க முடியும். இந்த இரண்டு நாள் முரண்பாட்டை எமது 2014/04/07 திகதியிடப்பட்ட எமது முதல் மடலில் பூரண நிலவை ஆதாரமாக்காட்டினோம். தற்போது மேற்படி ஆதாரங்களின்படி 2014/04/30 புதன்கிழமை றஜப் மாத முதல்நாள என்பதையும் உறுதிப்பட கூறுகின்றோம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

பிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல் I

First Solar Eclipse of 2014 Occurs Tuesday: Australia Set for Best View

http://www.space.com/25639-first-solar-eclipse-2014-tuesday.html

Apr 29, 2014 Annular Solar Eclipse

http://www.timeanddate.com/eclipse/solar/2014-april-29

வெளியீடு

(VIRF) விருதோடை இஸ்லாமிய ஆய்வு நிலையம்
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506,  077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040

 

Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/


One thought on “பிறைகள் தொடர்பாக சுமுக நிலையை எய்தல் II

  1. Justice says:

    இது தொடர்பான உலமா சபையினர் (ACJU) தமது கருத்துக்களையும் இங்கு பதிப்பித்தால் முஸ்லிம்கள் தெளிவு பெற அது ஏதுவாக இருக்கும். செய்வார்களா?

Leave a Reply to Justice Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All