Puttalam Online
kids

எதை சாதிக்கப்போகிறோம்

  • 5 May 2014
  • 614 views

எதை சாதித்தோம் என்பதை விட எதை சாதிக்கப்போகிறோம்
சாதித்ததை விட முக்கியம் சாதிக்கப்போவது
மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்ற சத்யா அவருடனான நேர்காணல்.
உங்களுக்கு முன் இந்தப்பதவியை வகித்த ஸ்டீவ் பால்மரிடம் இருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன?
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வருடாந்த ஆய்வு கூட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன். நான் எப்படிச்செயல்படுகிறேன்? என்று கேட்டேன். “உங்களுக்குத் தெரியும்ää எனக்குத்தெரியும்ää மற்றவர்களுக்கும் தெரியும்ää உங்களைப்போன்ற உயர்நிலையில் உள்ளவர்கள் எப்படிச்செயல்படுகிறீர்கள் என்பது எல்லோர்க்கும் தெரிந்து விடும். எனவே அதை மற்றவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டியதே இல்லை.” என்றார்.
ஏனக்கு முன்னால் இந்தப்பதவியில் இருந்தவர்களுடன் ஒப்பிடும் போது நான் எப்படிச்செயல்படுகிறேன் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன்.
யாருக்கு வேண்டும் இந்த ஒப்பிடல் எல்லாம். ஆவர்கள்ää அவர்களுடைய காலத்தில் அவர்களுக்கு இருந்த வசதிகளுடன்ää அவர்களுக்கேற்பட்ட சவால்களை சமாளித்திருப்பார்கள். அதை வைத்து இப்போது உங்களை எப்படி எடை போட முடியும்?
உங்களுக்குள்ள இலக்குகளை நீங்கள் எப்படி அடைகிறீர்கள் என்பது தான் எனக்கு முக்கியம். இதில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்ää முன்னால் இருந்தவர்கள் எப்படி செயல்பட்டார் என்பதெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இப்போதுள்ள பிரச்சினைகள்ää சவால்களை தீர்ப்பதில் மட்டுமே நீங்கள் அக்கரை காட்ட வேண்டும். உங்களுடைய கடமையைää முழுத் திறமையுடன்ää அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுகிறீர்களா என்று நேர்மையாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
பில் கேட்ஸ் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பில் கேட்ஸ் எதையும் தீவிரமாக பகுப்பாய்வு செய்வதில் வல்லவர். அவர் எல்லா தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டுää எப்பொதும் தயார் நிலையிலேயே இருப்பார். நூம் எதையாவது கூறத்தொடங்கும் போது முதல் ஐந்து வினாடிகளுக்குள்ளாகவே நாம் சொல்லும் விடயத்தில் உள்ள தர்க்கரீதியிலான குறையைச் சுட்டிக்காட்டுவார். தோடக்கக்காலத்தில் அவர் என்றாலே எனக்குள் அச்சம் ஏற்படும்.
உண்மையில் அவர் யதார்த்தவாதி. ஊங்களுடைய கருத்தை அவரிடம் விவாதித்துச் சம்மதிக்க வைக்க முடியும். தொடக்கத்தில் ஓரிரு நிமிடங்கள் வெகு தீவிரமாக உங்களுடைய கருத்தை ஏற்காதது போல விவாதித்தாலும் இறுதியில்- நீங்கள் சொல்வது தான் சரி என்று சொல்வதில் முதலாவதாக இருப்பார்.
பில் கேடஸ்ää ஸ்டீம் பால்மர் ஆகியோரிடம் உள்ள பொதுவான குணம்ää முதலில் உங்களுடைய கருத்தில் நீங்கள் எந்த அளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்று சோதித்தப் பார்ப்பதுதான்.
பில் கேட்ஸ் உங்களுடன் சேர்ந்து என்ன செய்யப் போகிறார் என்று அறிந்து கொள்ள நிறைய பேருக்கு ஆர்வமாக இருக்கிறது?
வெளியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இவரும் பில்கேட்ஸம் எப்படி இணைந்து செயல்படுவார்கள் என்ற வியப்பு ஏற்பட்டிருக்கலாம். குடந்த ஒன்பது ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் சேர்ந்து தான் பணி புரிந்து வருகிறோம்ää எனவேää எனக்கு இதில் எந்த பிரச்சினையும் இல்லை. என்னுடன் சேர்ந்து பணியாற்ற மேலும் நேரம் ஒதுக்கிக்கொள்ளுமாறு அவரிடம் கோரியிருக்கிறேன். சுpல வேலைகளில் அவர் தனக்கு இருக்கும் பெரிய வேலைகளை தள்ளி வைத்துவிட்டுää சரி உங்களுடைய வேலை என்னவென்று கேட்டுää எங்களுடன் பேசி உற்சாகப்படுத்துவார். மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள எல்லோரையும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்றிää அவர்களுடைய மிகச்சிறந்த திறமைகளை வெளிக்கொண்டு வருவதுதான் அவருடைய தனிச்சிறப்பு. அது அவருக்கு இயற்கையில் ஏற்பட்ட வரம்.
புதிய பொறுப்பில் உங்களுடைய நிர்வாக அணுகுமுறை எப்படியிருக்கும்?
நிறுவளத்தின் வௌ;வேறு பிரிவுகளில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் குழுவினால் கிடைக்கக்கூடிய பலன்களைää எந்த அளவுக்கு அதிகபட்சம் உயர்த்த முடியும் என்பதில்தான் இப்போது கவனம் செலுத்துகிறேன். ஆவர்களின் தலைமை பொறுப்புகளை வலுப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் நான் என்ன செய்யப்போகிறேன் என்பது தான் முக்கியம். இந்த நிறுவனத்தின் உயர்ப்பதவியில் உள்ள பலருடன் நான் ஒரு காலத்தில் இணைந்து வேலை செய்திருக்கிறேன். அனைவரையும் இணைத்து ää அவரவர் வேலைகளில் பற்றுதலோடு ஈடுபடுத்தி ää அதில் வெளிப்படும் ஆற்றலை அனைவரையும் உணர வைப்பதே என் பணி. தனித்தனியாக ஒவ்வொருவரையும் வைத்து நான் அவர்களை எடைப்போடுவதில்லை. அசாதாரணமான திறமைகள் இல்லாமல் அவர்களால் இங்கே வந்திருக்க முடியாது. நூன் எங்களை ஓர் அணியாகத்தான் மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். நாம் முறையாக ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்கிறோமா? ஒருவர் மற்றெரருவருடைய திறமைகளை நிறுவனத்தின் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறோமா என்பது தான் முக்கியம்.
மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒன்றே என்ற ஐக்கிய உணர்வை ஏற்படுத்துவது தான் இலட்சியம் என்று உங்களுடைய நிறுவனம் கூறியிருக்கிறதுää அதை எப்படி சாதிக்கப்போகிறீர்கள்?
எங்களுடைய தலைமை அணியின் நோக்கம் என்ன என்பது குறித்து நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறோம். முதல் கூட்டத்திலெயே அது குறித்து பேசியிருக்கிறோம். எங்களுடைய நிறுவனத்தின் செயல்பாட்டில் தெளிவுää சீர்மைää தீவிரமான ஈடுபாடு ஆகியவற்றைக்கொண்டு வரும் கட்டமைப்பை ஏற்கனவே உருவாக்கியிருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் வகுத்த வெற்றிகரமான உத்தியின் அடிப்படையிலேயே அந்தந்த சூழலுக்கு ஏற்ப செயல்பட்டு வந்திருக்கிறோம். இப்போது புதிய உத்தியை வகுக்க வேண்;டும். 1ää30ää000 பேருடைய அறிவுத்திறனை எப்படிப்பயன்படுத்தப் போகிறோம்? அமைப்பு ரீதியான எந்தக்கட்டமைப்பும் இப்போது அர்த்தமற்றதாகிவிட்டது. ஏனென்றால் தொழில் ரீதியாக வரக்கூடிய போட்டிகளும் புதிய கண்டு பிடிப்புகளும் இந்த எல்லைகள்ää கட்டமைப்புகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.
உங்களுடைய புதிய பொறுப்பை எப்படி அணுகுவது என்ற இறுதித்திட்டம் ஏதாவது தயாராக இருக்கிறதா?
இந்தத்துறையில் நீண்டகாலம் என்பதுää உங்களை நீங்களே புதிதாக அறிந்துக்கொள்வது அல்லது எதிர்காலத்துக்கு என்ன என்று புதிதாகக் கண்டுபிடிப்பது. ஏங்களை பொறுத்தவரை 39 ஆண்டுகளாக வெற்றி பெற்று வருவதால் புதிதாகக் கண்டு பிடிக்கது தான் இலட்சியமாக இருக்க முடியும். நாங்கள் மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்திருந்தாலும் எங்களுடைய எதிர்காலம் என்பது கடந்தகால வெற்றிகளை மட்டுமே பொறுத்ததல்ல. எதிர்காலத்துக்கு எங்களை இட்டுச்செல்லக்கூடிய வகையில் புதிதாக எதையாவது கண்டுபிடிப்போமா என்பதில்தான் வெற்றியிருக்கிறது. மனிதநாகரிகமானாலும் தோன்றுவதும் சரிவருவதும் இயற்கை. முனித ஆயுளை விட நிறுவனங்களின் ஆயுள் குறைவு. வெகு சில நிறுவனங்கள்தான் 100 அண்டுகளைக்கடந்தும் செயல்படுகின்றன. எங்களுடைய நிறுவனத்தை நூற்றாண்டு நிறுவனமாக மாற்றுவதுதான் எங்களுடைய இலட்சியம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All