Puttalam Online
current

புத்தளம் பெரிய பள்ளிவிடுக்கும் அன்பான வேண்டுகோள்!

26.05.2014

அன்பின் ஜமாஅத்தார்களுக்கு

السلام عليكم ورحمة الله وبركاته

76 வருடங்கள் பழைமைவாய்ந்த புத்தளம் பெரிய பள்ளியின் கூரை திருத்த வேலைக்கான உதவி கோரல்

1938 ஆம் ஆண்டு கட்டப்பட்ட எமது பள்ளிவாயலின் கூரை அமைப்பு தற்போது முழுமையாக புணரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. மழைகாலங்களில் பள்ளியின் பல பாகங்களிலும் மழை நீர் ஒழுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

Grand Mosque Puttalam

தற்போது இருக்கும் ஓடுகள் அனைத்தையும் எடுத்துவிட்டு முழுவதுமாக சீட்டுகள் போடுவதற்கு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தேச செலவு ரூபா 10 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே ஜமாஅத்தார்கள் உங்களால் இயன்ற உதவிகளை பணமாகவோ பொருளாகவோ வழங்கி சிறப்பான பழைமை வாய்ந்த இந்த அல்லாஹ்வின் இல்லத்தைப் பாதுகாக்க உதவி அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக் கொள்கிறோம்.

தேவாயன சீட்டுகள்

10 அடி எஸ்பெஸ்டஸ் சீட் 12
8 அடி எஸ்பெஸ்டஸ் சீட் 300
6 அடி எஸ்பெஸ்டஸ் சீட் 18

Account  No.0001779834 – Bank of Ceylon (Puttalam Branch)

தலைவர்
நிர்வாக சபை
முஹிதீன் ஜும்ஆ பள்ளி
புத்தளம்

தொலைபேசி இலக்கம் : 0322267451  / 0772226111

 


3 thoughts on “புத்தளம் பெரிய பள்ளிவிடுக்கும் அன்பான வேண்டுகோள்!

 1. Ali ithaaf nafeel says:

  சஹோதரர் நிஸ்தார் கூறிய விடயம் ஆராய்ந்ததில் அவர் கூறியது 100 வீதம் சரியானதே.
  எமது ஊரின் வரலாற்று சின்னமான பெரிய பள்ளியின் ஒரிஜினல் கட்டமைப்பு மாற்றப்படுவதுடன் சிகரெட் குடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்று நோய் வருவதற்கான வழி அமைக்கும் செயலாக இந்த அச்பெச்டஸ் சீட்டு அமையும்.இது துறை சார்ந்தோரின் முடிவு . என்னுடைய கருத்து அல்ல .

  தெரிந்து கொண்டே புத்தளத்தின் வரலாற்று சின்னத்தை மாற்ற வேண்டாம் . இன்றைய காலகட்டத்தில் எம்முடைய வரலாற்று சின்னங்கலை பேணுவதன் முக்கியத்துவம் என்னைவிட உங்களுக்கு நன்கு புரியும். எமது எதிர் கால சந்ததியை பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டாம் .

  பெரிய பள்ளி நிர்வாகம் – தயவு செய்து மக்கள் நலன் கருதி, எம்முடைய வரலாற்றை கருதி செலவை மட்டும் கருத்தில் கொள்ளாது தீர்மானத்தை மறுபருசீலக்கவும் .

  அல்லாஹு எமக்கு போதுமானவன் அவனே சிறந்த வழிகாட்டி . அவனை பயந்து கொள்ளுங்கள்.

 2. Rizan Ahmed says:

  நான் இந்த செய்தியை முதலில் வாசித்த போது “சீட் போடுவதனால் பெரிய பள்ளியின் அழகு கெட்டுவிடும்” என்று நினைத்தேன்! சஹோதரர் நிஸ்தார் அவர்கள் அதன் அழகு கெடுவது மட்டுமன்றி அதன் ஆபாத்தான விளைவுகளையும் குறிப்பிட்டு காட்டி விட்டார்!!

  பெரிய பள்ளி நிர்வாகம் – தயவு செய்து மீளாய்வு செய்யுங்கள்.

 3. Mohamed SR. Nisthar says:

  அன்புள்ள பள்ளி நிருவாகத்தினருக்கு,

  எஸ்பெஸ்டொஸ் சீட் போடுவதென்ற உங்கள் தீர்மானத்தை மீண்டும் ஒரு முறை பரிசீலிக்கவும். காரணம் இது “Lung cancer” கு ஒரு அடிப்படை காரணம் என்று சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்த ஐரோப்பிய நாடுகளில் இதன் பாவிப்புக்கான தடை அமுலுக்கு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோருக்கு இன்னும் நட்டஈடு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எஸ்பெஸ்டஸ் சீட் மாத்திரமல்ல எஸ்பெஸ்டல் துணுக்கைகள் உள்ள எந்த கட்டிட பொருளும் அனுமதிக்கப்படுவதில்லை. இதை துறைசார்ந்த்தோருடன் சரிபார்த்துக் கொள்ளவும். மேலும் கட்டிடத்துக்கு “சீட்” டை விட “ஓடு” அழகை கூட்டும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். இந்த எஸ்பெஸ்டஸ் இலங்கை கால நிலைக்கு இன்னும் ஆபத்தானது. இதை 2010ல் நான் குறிப்பிட்டதாக ஞாபகம். முடிந்தால் இத்தீர்மானம் மீள்பரிசீலனைக்கு கொண்டுவரப்படுவது வரவேற்கக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All