Puttalam Online
puttalam-news

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா கவனத்திற்கு

03 ஷாபான் 1435
31.05.2014

கௌரவ செயலாளர் அவர்கள்,
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா
கொழும்பு

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாகஹி வபரகாதுஹு

அல்லாஹ்வுடைய தீன் கண்ணியமானது எத்தகைய களங்கமும் அற்றது என்பது எமது ஈமான், எமது அகீதா.

தீனை அல்லாஹ் அவனின் மேலான வஹியைக்கொண்டும், ரசூல்(ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டல்களைக் கொண்டும் கண்ணியப்படுத்தியுள்ளான். இவ்விரண்டுக்கும் அப்பால்நின்று யாரும், நாம் தீனுக்கு மதிப்பளிக்கின்றோம் என்று வாதாடினால் அது அவர்களின் அறியாமையை பறைசாற்றுவதாகவே அமையும்.

இந்த வகையில் தங்கள் அமைப்போடு நீண்ட காலமாக தொடர்போடிருக்கும் நாங்கள் இந்தியா ஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வின் முடிவுகளை தங்களுக்கு கூறி வந்துள்ளோம். எனினும் தாங்கள் அவற்றை கருத்திற் கொண்டதாக இல்லை. இந்த மெத்தனப்போக்கு எங்கள் பார்வையில் தீன் அவ்வப்போது கொச்சைபடுத்தப்படுவதற்கும் மக்கள் நலன் பாதிப்புக்குள்ளாவதற்கும் வழிகோலியுள்ளது என்பதே உண்மை.

எனவே, இஸ்லாமிய மாதங்களை ஆரம்பிக்கும் விடயத்தில் தாங்கள் விடாப்பிடியாக பின்பற்றும் வழிமுறை ஷரீஆ ரீதியில் மிகச் சரியானதுதான் என்பதை நாங்களும் ஐயந்திரிபற தெரிந்து கொள்ள சில விளக்கங்களை தங்களிடம் இத்தால் வேண்டுகின்றோம்.

1.   அல்லாஹ் அல்குர்ஆனில் ஸூரா பகரா 189 ஆம் வசனத்தில் பிறைகளை பற்றியும் ஸூரா யாஸீனின் 39 ஆம் வசனத்தில் பிறைகளின் படித்தரங்கள் பற்றியும், ஸுரா யூனுஸின் 05வது வசனத்தின் மூலம் பலவருடங்களுக்காக காலக்கணக்கின்படி நாட்காட்டியை தயார் செய்து அறிந்து கொள்ள முடியும் என்பதையும் குறிப்பிடுகின்றான். தங்களிடம் மேற்குறிப்பிடப்படும் மனித குலத்திற்கான நாட்காட்டி இருக்கின்றதா? தாங்கள் அத்தகையதோர் நாட்காட்டியை அமைத்துள்ளீர்களா? மக்களுக்கு நீங்கள் அறிவிக்கும் நாட்காட்டி அல்லாஹ் குறிப்பிடும் மனித குலத்திற்கான நாட்காட்டிதானா? தயவுசெய்து குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துவீர்களா?

2.   நாங்கள் ஹைர உம்மத், அல்லாஹ்வின் இறுதிவேதத்தை விசுவாசித்து முழுமனித குலத்திற்கும் வழிகாட்ட வேண்டிய பொறுப்பைச் சுமந்தவர்கள். திட்டமிட்டு பணிகளை குறித்து வைப்பதற்கும், சமூக எழுச்சிக்கான பணிகளை முன் கூட்டியே இஸ்லாமிய மாதங்களின் அடிப்படையில் ஆரம்பிப்பதற்கும் தங்களிடம் இஸ்லாமிய நாட்காட்டி உண்டா? (ஸூரா அல் பகராவின் 282 ஆம் வசனம் சுட்டி காட்டும் “விசுவாசம் கொண்டோரே நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணைவரை ஒருவருக்கு ஒருவர் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால் எழுதிக் கொள்ளுங்கள் என்று குறிபிடுவதற்கு அமைய……….”) அப்படியொன்று தேவையில்லை, அவ்வப்போது மறையும் 1ஆம், 2ஆம், 3ஆம் பிறைகளில் புறக்கண்ணுக்கு தெரியும் ஒன்றை வைத்து மாதத்தை ஆரம்பிப்பது தானே என எண்ணுகின்றீர்களா?

3.   உலமா சபையை வழிநடாத்தும் அறிஞர் பெருமக்களே! மறுமை நாள் வரை வழிகாட்ட வந்த இந்த வேதம் (அல்குர்ஆன்) அதற்கான வழிகாட்டலை தரவில்லை என்றா சொல்லப்போகிறீர்கள் (நவூதுபில்லாஹ்) உதாரணமாக அடுத்த வருடம் எந்த மாதம் எந்த திகதியில் எத்தனை மணிக்கு சூரிய கிரகணம், அல்லது சந்திர கிரகணம் நிகழும் என மிகத்துல்லியமாக அறிவிற்கும் காலப்பகுதியில் வாழ்கின்றோம். ஏன் அதனை ஏற்று சரிகண்டு கிரகண தொழுகையை நிறைவேற்ற தயாராகின்றோம். சரி நாங்கள் இப்போது ஹிஜ்ரி 1435 ஆம் ஷஃபான் மாத 03ம் பிறையில்  இருக்கின்றோம். எதிர்வரும் ரமழான் எந்த நாளில் ஆரம்பிக்கும் என்று தங்களால் மக்களுக்கு அறிவிக்க முடியுமா? தாங்கள் பின்பற்றும் வழிமுறையில் இது சாத்தியமே இல்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் அப்படித்தானே! விடயம் அவ்வாறன்று விரிவானது. இன்னும் காததூரம் செல்லவேண்டியுள்ளது.

4.   இந்தியாவின் ஹிஜ்ரி கமிட்டி சுமார் 40 வருட ஆய்விற்குப் பின் பல வருடங்களுக்கு முன்பே,பின்னே வரும் பல ஆண்டுகளுக்கான இஸ்லாமிய நாட்காட்டியை வெளியிட்டுள்ளது.இன்றுவரை அதில் எந்த தவறுமே ஏற்படவில்லை.

5.   தாங்கள் பின்பற்றும் வழிமுறையின் பிரகாரம் மஃரிபின் பின் முதற் பிறையை தேடும்படி அறிவிகின்றீர்கள். அதன்படி தென்பட்டால் அப்பிறையை அடுத்தநாள் பிறையாக பிரகடனப்படுத்துகிறீர்கள். இதற்கு ஷரீஆ ரீதியான ஆதாரம் உண்டா? பார்க்க

(I) அல்குர்ஆன் 55:5  வசனத்தின்படி சூரியனும், சந்திரனும் கணக்கின்படியே செல்கின்றன.
(II) நாளின் தொடக்கம் பஜ்ர் ஆகும். (அல்குர்ஆன் 89 1-5)
(III) இரவு பகலை முந்த முடியாது (36-40)
(IV) நடுத்தொழுகை அஸர் (புஹாரி 4533),
(V) நபி (ஸல்) அவாகள் இஃதிகாப் பஜர் தொடக்கம் பஜ்ர் வரை இருந்தார்கள் (புஹாரி 2033)
(VI) ஹதீஸ் எண் 1885 (புஹாரி) இதன்படி தென்படும் நாளுக்குரிய பிறையேயன்றி வேறு நாளுக்குரியதல்ல அதனை தாங்கள் மஃரிபில் தான் நாள் ஆரம்பிக்கிறது என கூறுவதற்கு ஷரீஆ ரீதியான ஆதாரம் உண்டா?

எங்களின் பணிவான வேண்டுகோள்.

மேற்படி இந்திய ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டுள்ள நாட்காட்டியை தாங்கள் கண்மூடித்தனமாக ஏற்க வேண்டுமென நாங்கள் கூறவில்லை. மாறாக அவர்களின் ஆய்வை உங்களோடு இருக்கின்ற வானவியல் அறிஞர்கள் நிபுணாகள், மூலம் மீளாய்வு செய்து பார்க்கும் படி பணிவாக வேண்டுகிறோம். ஏனெனில் அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி மிகச் சரியானதையே மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்பதற்காக. தங்களின் அந்த ஆய்வில் ஷரீஆ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் யதார்த்தமாகவும் பிழை காண்பதற்கு ஏதுமில்லை என்று நிரூபனமானால் அதை ஏற்பது தானே சத்தியத்தை மதிப்பதாக அமையும். இறுதியாக கிறிஸ்த்தவ கிரிகோரியன் நாட்காட்டியை விடுத்து அல்லாஹ் வழங்கியுள்ள மிகச்சரியான மனிதகுல நாட்காட்டியை நோக்கிப் பயணிப்பது எம்மனைவரதும் பொறுப்பாகும். அனைவருக்கும் நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.

நன்றி! வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்.
செயலாளர்
M. I. M. Nisar
VIRF

பிரதிகள் –

01. ஜம்இய்யதுல் உலமா மாவட்டக்கிளைகள்
02. இஸ்லாமிய அமைப்புக்கள்
03. நாடறிந்ந உலமாப் பெருமக்கள்


4 thoughts on “அகில இலங்கை ஜம்மியதுல் உலமா கவனத்திற்கு

 1. Mohamed SR. Nisthar says:

  அன்புள்ள நிஸார்,

  யாரிடம் கேட்கின்றிர்கள்? நீங்கள் அவர்களிடம் எப்படி கேட்க முடியும்? அவர்கள் நபி வழி வந்தவர்களாக கற்பனையில் வாழ்கிறார்கள். அதாவது எல்லாம் ஞானமும் பெற நபி வழி உத்தரவாதம் என்கின்றார்கள். நபிகள் கூட பல விடயங்களில் மற்றோரிடம் ஆலோசனை பெற்றுள்ளார்கள் என்பதையும் அறியாத இவர்கள் எப்படி உங்கள் வேண்டுகளை ஏற்கப் போகிறார்கள்?

 2. Justice says:

  100. ‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
  Volume :1 Book :3 -ஸஹிஹ் அல் புஹாரி http://www.tamililquran.com

  • EASTERNBROTHER... says:

   சரியாக சொன்னீர்கள்……

   இலங்கை உலமா சபை கென்றே இந்த ஹதீஸ் சொல்லப்பட்டது போல் உள்ளது………….

   ஒரு வேலை நீங்க மாத்தி பல்டி அடித்து இல்லை இல்லை என்று சொல்வீர்களோ…………

   உலமா என்று பெயர் வைத்துகொண்டு வயிறு வளக்கும் கூட்டத்தில் அறிஞர் என்று ஒருவனாவது இருக்க வேண்டாமா?????????????????// பாவம் முஸ்லிம் சமூகம்……..

 3. EASTERNBROTHER... says:

  பிரதர்,

  நாமதான் ஊர் ஊராக சென்று கருத்தரங்குகள் நடத்தி குர் ஆனை அறிவு பூர்வமாக விவரித்து மக்களுக்கு தெளிவை உண்டாக்க வேண்டும்……

  மக்கள் விளங்கினால் பொறகு இந்த உ லக்க சபை நமக்கு எதுக்கு………….??

  எனவே உடன் மக்கள் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்………..அல்லாஹ் உதவுவான்…….. இந்திய ஹிஜ்ரி COMMITTEE அழைத்தால் வருவார்கள்…….நான் அவர்களிடம் ஒருமுறை கேட்டதற்கு அவர்கள் இலங்கை வந்து பிரச்சாரம் செய்ய தயார் என்று கூறினார்கள்…….

Leave a Reply to EASTERNBROTHER... Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All