Puttalam Online
current

வெட்டுக்குள மையவாடி சிரமதானப் பணி – மீண்டும் 12 திகதி வியாழக்கிழமை

06.06.2014

அன்பின் ஜமாஅத்தார்களுக்கு

السلام عليكم ورحمة الله وبركاته

வெட்டுக்குள மையவாடியை சிரமதானம் மூலம் துப்பறவு செய்தல்

சென்ற வாரம் மேற்கொள்ளப்பட்ட மேற்படி சிரமதானப் பணி பூர்த்தியாகாத நிலையில் மீண்டுமொரு சிரமதான நிகழ்வு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 12.06.2014 வியாழக்கிழமை காலை 6.00 மணிமு முதல் 10.00 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்ற வாரம் இடம்பெற்ற சிரமதான நிகழ்வில் சுமார் 60 பேர் வரை மட்டுமே கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட எமது நகரில் சிறிய தொகையிரே கலந்து கொண்டமை கவலைக்குறிய விடயமாகும். அவ்வாறு கலந்து கொண்டவர்களுக்கும் சிற்றுண்டிகள் குளிர்பானங்கள் வழங்கி உதவிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி  வழங்குவானாக.  

மேற்படி மையவாடியில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே சுத்திகரிக்கப்பட்டுள்ளது. பெருமளவான பகுதி இன்னும் துப்பரவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் முடியுமான ஆண்கள் அனைவரும் மேற்படி சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டு பூரணமாக சுத்திகரித்து முடிப்பதற்கு பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

சிரமதானத்திற்கு சமூகம் தரும்போது மண்வெட்டி, ரேக்கைகள் புல்லு வெட்டும் இயந்திரங்கள் போன்றவற்றை கொண்டு வருமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம்

குறிப்பு: சிரமதானப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு குளிர்பானங்களை வழங்குவதற்கு விரும்பியோர் ஏற்பாடு செய்யுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.

 

தலைவர்

நிர்வாக சபை
முஹிதீன் ஜும்ஆ பள்ளி – புத்தளம்

MMM

IMG-20140602-WA0015 IMG-20140602-WA0024 IMG-20140602-WA0019 IMG-20140602-WA0018 IMG-20140602-WA0017 IMG-20140602-WA0016 IMG-20140602-WA0012 IMG-20140602-WA0014 IMG-20140602-WA0009 IMG-20140602-WA0010 IMG-20140602-WA0007 IMG-20140602-WA0006 IMG-20140602-WA0005 IMG-20140601-WA0033 IMG-20140601-WA0032 IMG-20140601-WA0031 IMG-20140601-WA0030 IMG-20140601-WA0029 IMG-20140601-WA0015 IMG-20140601-WA0016 IMG-20140601-WA0024 IMG-20140601-WA0013 IMG-20140601-WA0012


One thought on “வெட்டுக்குள மையவாடி சிரமதானப் பணி – மீண்டும் 12 திகதி வியாழக்கிழமை

  1. abu aneeq says:

    யா அல்லாஹ்! வாழ்க்கையில் ஒரு தடவையாவது மையவாடி சிரமதானத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கடலுக்கு அப்பா லிருந்து மனம் வேண்டுகிறது .

    யா அல்லாஹ், இந்த நல்ல பணியில் கலந்து கொண்ட அனைவரது கபுறுகளையும் விசாலப்படுத்திவைப்பாயாக! ஆமீன்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All