சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்த அமீர் சேர்

(Puttalam Buddies)

விழுமியங்கள் மற்றும் பண்பாட்டின் மீதான வறுமை அல்லது தேக்க நிலை சமூக நகர்விற்கு பாரிய தடைகல்லாகும்.

முன்மாதிரியான ஆளுமைகளை அறியச் செய்தல் சமூக விழுமியங்களையும் பண்பாட்டினயும் போதிக்கச் செய்வதற்கு சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகும். முன்னுதாரணங்கள் அருந்தலாக இருக்கின்ற இக்காலப் பிரிவில் அத்தகைய அளுமைகளின் வாழ்வின் நடிபங்குகளை சகலரும் அறியச் செய்வது காலத்தின் அவசியத் தேவையாகும்.

இத்தகையோரின் சமூக மற்றும் ஆன்மீகப் பணிகளை ஆய்வு ரீதியாக அச்சுருவில் ஆவணப்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்வது ஒரு சமூக கடமையாகும்.