Puttalam Online
special-articles

பெரிய பள்ளிக்கு வருகைதந்த சவூதி அரபிய அஷ்-ஷெய்க் அப்துல்லாஹ் அல் பர்ராக்

  • 15 June 2014
  • 921 views

புத்தளம் பெரிய பள்ளிவாசல் இந்நாட்டில் முக்கியத்துவம்வாய்ந்த பள்ளிவாசலொன்றாகும். முழு புத்தளம் பிரதேசத்திற்கும் தலைமைத்துவத்தினை வழங்கிக் கொண்டிரிக்கும் வரலாற்றுப் பெருமைமிகு இப்பள்ளிவாசல் சமய, சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் தனது மகத்தான பங்களிப்பினை வழங்கி வருகின்றது.

DSC08695

இதன் முக்கியத்துவம் கருதி,  இந்நாட்டினை ஆட்சிபுரிந்த சிங்கள மன்னர்கள் பலர் இப்பள்ளிவாசலை தரிசித்துள்ளதுடன் தமது விஜயத்தினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களையும் அன்பளிப்புச் செய்துள்ளனர். கடந்த வருடம் இந்நாட்டின் சனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களும் இப்பள்ளிவாசலுக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டுப் பிரமுகர்கள், கல்விமான்கள், மற்றும் ராஜதந்திரிகள் என பலரும் விஜயம் செய்துள்ளதுடன் பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள நினைவுக் குறிப்பேட்டில் தமது கருத்துக்களையும் பதிவுசெய்துள்ளனர்.

இந்தவகையில்,  சவூதி அரபிய தூதுவராலய இஸ்லாமிய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி அஷ் ஷெய்க் சாலிஹ் அப்துல்லாஹ் அல் பர்ராக் நேற்று (14.06.2014) புத்தளம் பெரிய பள்ளிக்கு சமூகமளித்தார். இவரை பெரிய பள்ளி நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் SRM முசம்மில் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்.

இச்சந்திப்பில், காசிமியா அரபுக்கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் மற்றும் அஷ்-ஷெய்க் ஜுனைத் மதனி உட்பட பலர் கலந்து கொன்டதுடன், பள்ளிவாசலின் கூரை திருத்த வேலைகளுக்கான ஒத்துழைப்பினை சவூதி அரபிய அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டுமென்ற மகஜர் ஒன்றும் அஷ்-ஷெய்க் அப்துல்லாஹ் அல் பர்ராக் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

SAT

DSC08683 DSC08685 DSC08687 DSC08688 DSC08690 DSC08692 DSC08693 DSC08694

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All