Puttalam Online
current

புத்தளம் பெரிய பள்ளி, ஜம்மியத்துல் உலமா, நகர சபை இணைந்து விடுக்கும் வேண்டுகோள்

Grand Mosque Puttalamஅளுத்கம, பேருவல ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக, புத்தளம் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடும் கூட்டம், 2014.06.18 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் பெரியபள்ளி வாசலில் நடைபெற்றது.

பெரியபள்ளியின் நிருவாக சபைத் தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில், ஜம்மிய்யதுல் உலமா சபை புத்தளம் மாவட்டக் கிளையின் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு சமூகமளித்த பலர், தத்தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

இறுதியில் எடுக்கப்பட்ட முடிவினை புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் ஜம்மியத்துல் மற்றும் புத்தளம் நகர சபை இணைந்து எடுத்த தீர்மானமாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டது;

1. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைப்பதற்கான உதவியினை பெரிய பள்ளியின் தலைமையில் பணமாக சேகரித்து அனுப்பி வைத்தல். இதற்கான உதவிகளை   வழங்க முன்வருபவர்கள் தமது பணத்தினை பெரிய பள்ளியில் ஒப்படைக்க முடியும்.

2. குறித்த அசம்பாவித சம்பவங்களினை தொடர்ந்து பொலிஸ், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிற சமயத் தலைவர்களுடன் புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் ஜம்மியத்துல் மற்றும் புத்தளம் நகர சபை என்பவற்றினால் தொடர்ந்து நடத்தப்பட்ட  சந்திப்புகளின் பலனாக உருவாகியுள்ள பரஸ்பர புரிந்துணர்வு, எமது பிரதேசத்தின் சமூக சூழ் நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு புத்தளத்தில் கடையடைப்பு, ஹர்த்தால், ஆர்பாட்டங்கள் எதனையும் செய்யாது, சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்த முயற்சித்தல்.

இவ்விரண்டு தீர்மானங்களையும் சமூகளித்திருந்த அனைவரும் பெருமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.

 

தலைவர்
நிருவாக சபை
புத்தளம் முஹைதீன் (பெரிய) பள்ளிவாசல்
புத்தளம்

தொடர்புகளுக்கு : 0772226111

SAT


One thought on “புத்தளம் பெரிய பள்ளி, ஜம்மியத்துல் உலமா, நகர சபை இணைந்து விடுக்கும் வேண்டுகோள்

  1. isthiyak says:

    இது சரியான முடிவுதான?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All