Puttalam Online
current

நிதி சேகரிப்பு – பெரியபள்ளியுடன் வாலிபர்க் குழுக்கள்

Hisham Hussain – (TPT Media)

Aluthgama Fund

அளுத்கம, பேருவல பகுதிகளில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிதி சேகரிப்பு தொடர்பாக, புத்தளம் பெரியபள்ளி பின்வரும் ஒழுங்கினை மக்களுக்கு அறிவிக்கின்றது.

மேற்படி நிதி சேகரிப்பு நான்கு (4) பகுதிகளாக நடைபெறும். அவையாவன:

பகுதி 1:- வர்த்தக நிலையங்களில் சேகரித்தல் (இந்தப் பகுதி நிதி சேகரிப்பு நிறைவடைந்துவிட்டது)

20140622_143551

பகுதி 2:- தனிமனிதர்களிடம் சேகரித்தல் – இப் பகுதியில் துறைசார் நிபுணர்கள் (வைத்தியர், சட்டத்தரணி போன்ற) மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து நிதியை சேகரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

பகுதி 3:- வீட்டுக்கு வீடு சேகரிப்பு – இந்தப் பகுதி சேகரிப்புக்காக தொண்டர்கள் தேவைப்படுகின்றனர். வீட்டுக்கு வீடு நிதி சேகரிப்புக்கான திகதி, நேரம் ஆகியன சமூக ஊடகங்கள், டுவீட்டர் சேவைகள் மூலம் அறிவிக்கப்படும்.

பகுதி 4:- ஜும்மாப் பள்ளிகளில் சேகரித்தல். எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகைக்காக வருகைத் தருவோர் இந் நிதியன்பளிப்புக்காக என பணத்தைக் கொண்டுவாருங்கள். நிதி சேகரிப்புக்காக நியமிக்கப்பட்ட தொண்டர்கள் -இத்துடன் காணப்படும் ஸ்டிக்கர் ஒட்டிய- விசேட உண்டியல் பெட்டிகளை வைத்திருப்பார்கள். அவ் உண்டியல் பெட்டிகளில் பணத்தைப் போடுங்கள்.

<< பள்ளிவாசலின் உண்டியலில் அல்ல என்பதைக் கவனத்திற்கொள்ளுங்கள்>>

20140622_143601

நேற்றைய (22.06.2014) வர்த்தக நிலைய நிதி சேகரிப்பின் போது பெருமனதுகொண்டு நிதியுதவியை நல்கிய வர்த்தகர்கள் அனைவருக்கும்; நிதி சேகரிப்புப் பணிகளில் பெரியபள்ளியின் தலைமைத்துவத்துடன் இணைந்து அர்ப்பணச் சிந்தையுடன் பணியாற்றும் வாலிபக் குழுக்களுக்கும் புத்தளம் மக்கள் சார்பாக பெரியபள்ளி நிருவாக சபை தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் நன்றியைக் கூறிக்கொள்வதாக தெரிவித்தார்.

 


One thought on “நிதி சேகரிப்பு – பெரியபள்ளியுடன் வாலிபர்க் குழுக்கள்

  1. The Puttalam Times says:

    பகுதி 3:- வீட்டுக்கு வீடு நிதி சேகரிப்பு

    நாளை மறுதினம், 25 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு (அஸர் தொழுகையின் பின்) மஸ்ஜிதுல் பகாஹ் (வெட்டுக்குளம் பள்ளி)யில் இருந்து ஆரம்பமாகும்.

    மஹல்லா / கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந் நிதி சேகரிப்புப் பணியில் வாலிபக் குழுக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் சகோதரர்கள், அஸர் தொழுகைக்கு வெட்டுக்குளம் பள்ளிக்கு வருகைத் தருமாறு அழைக்கப்படுகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All