அமானி சாரா – புத்தளம்
புத்தளம் மக்களில் பெரும்பாலானோர் முன்னைய காலங்களில் வியாபாரத்திலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தமையினை நாம் மறுக்க முடியாது. எனினும் இன்றைய காலத்தில் எமது இளம் தலைமுறையினர் பல்வேறு துறைகளிலும் அதிக ஆர்வம் காட்டி தற்போது பல்வேறு துறைசார் நிபுணர்களாக பல்வேறு பிரதேசங்களிலும் கடமையாற்றி வருகின்றனர்.
அன்றைய மாணவர்கள் தற்போது இவ்வாறு பல்வேறு துறைகளில் பல்வேறு இடங்களிலும் முக்கிய பதவிகளில் கடமையாற்றி வருவதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாக அவர்கள் கற்ற பாடசாலைகளே அமைகின்றன.
இதற்கமைய வெளிப்பிரதேசங்களில் முக்கிய பதவிகளில் கடமையாற்றுவோர் எந்தளவு தாங்கள் கற்ற பாடசாலைகளின் அல்லது தங்கள் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் சிந்திக்கிறார்கள் என்பது கேள்வி குறியான விடயம்தான். எனினும் இவர்களினை எந்தளவு பாடசாலை அபிவிருத்தி தொடர்பிலான விடயங்களில் பங்குபற்றுவதற்கு குறித்த பாடசாலைகள் முக்கியத்துவம் வழங்குகின்றது என்பதும் கேள்வி குறியான விடயமே ஆகும்.
ஆம், கடந்த காலங்களில் ஆரம்ப பாடசாலைகளாகட்டும் அல்லது ஏனைய பாடசாலைகளாகட்டும் அவற்றின் சில முக்கிய கூட்டங்கள் வெளிமாவட்டங்களில் கடமையாற்றுவோர் பங்குபற்ற முடியாதவாறு வெள்ளிக்கிழமைகளில் வைக்கப்பட்டுள்ளமை பலரிடத்தில் அதிப்தியினையும்ää ஆத்திரத்தினையும் தூண்டியுள்ளது.
இக் கூட்டங்களில் பலர் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டாலும் வெளி மாவட்டங்களில் கடமையாற்றுவோர் அவர்களின் சார்பில் பிறிதொருவரினை கலந்து கொள்ளச்செய்தமையினை கூட்ட ஏற்பாட்டாளர்கள் நினைவிற்கொள்ள வேண்டியுள்ளது.
புத்தளத்தில் அதிகமானோர் வியாபாரத்தில் ஈடுப்படுகின்றனர். அவர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும் எனவே வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் வைப்பது சிறந்தது என தெரிவிக்கும் நபர்கள் வெளிமாவட்டங்களில் கடமையாற்றுவோர் பங்கு பற்ற முடியாது என்று நினைக்க மறந்து விடுகிறார்களோ அல்லது அவர்கள் பங்கு பற்றினால் தாங்கள் நினைத்த விடயங்களினை நடாத்த முடியாது என்று நினைக்கிறார்களோ தெரியாது?
சனிக்கிழமை மாலையிலும் நமது வியாபாரிகள் விடுமுறை எடுக்கிறார்கள். இந் நாளில் வெளி மாவட்டங்களில் கடமையாற்றுவோரும் புத்தளத்தில் தங்கியிருப்பார்கள். எனவே சனிக்கிழமை மாலையில் கூட்டங்கினை நடாத்த பொறுத்தமான நாளாகும்.
இதனை விடுத்து வெளிமாவட்டங்களில் கடமையாற்றுவோரினை புறந்தள்ளி வெள்ளிக்கிழமைகளில் கூட்டங்கள் நடாத்தப்படுமிடத்து முக்கியமான இடங்களில் பல்வேறு துறைசார் நிபுணர்களின் துறைசார் விடயங்களினை பெற்று கொள்ள முடியாது போகலாம் என்பதுடன் அவர்களின் பங்களிப்பினையும் முழுமையாக பெறமுடியாத நிலையினை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே பாடசாலைகள் மாத்திரமன்றி ஏனைய அமைப்புக்களும் அவசர கூட்டங்களினை தவிர்த்து ஏனைய கூட்டங்களினை சனிக்கிழமைகளில் நடாத்தனால் அனைவருக்கும் சிறந்ததாக அமையும்.
SAT
Share the post "சிந்தனைக்கு : புத்தளம் மக்கள் வியாபாரிகள் என்று கருதும் நிலைப்பாடு மாறுமா?"