அன்புள்ள வாசக நேயர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் புனித மிகு ரமழானை எதிர்நோக்கி இருக்கின்றோம். ரஸூல் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை மிக விளிப்பாக இருந்து கணக்கிட்டு வந்தார்கள். ரமழானை முழுமையாக அடைவதில் கரிசனையுடன் உச்ச கவனம் செலுத்தினார்கள்.
இன்ஷா அல்லாஹ் நாளை 26.06.2014 வியாழன் அன்று ஃபஜ்ர் நேரத்தில் கிழக்கு வானை அவதானித்துப் பாருங்கள். அல்லாஹ் நாடினால் நாங்கள் ஷஃபான் பிறையின் இறுதி வடிவத்தைக் காணலாம். அல் குர்ஆன் இருதிப்பிறையை உருஜூனில் கதீம் என்று சூரா யாசீன் 39 வசனத்தில் குறிப்பிடுகின்றது.
மேற்குறித்த இறுதி வடிவம் தென்பட்டால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 27.06.2014 அமாவாசை நாளாகும். அன்று சந்திரன் மறைக்கப்படும் (சங்கமம் நிகழும்) இவ்வாறு சந்திரன் மறைக்கப்படுவதைதான் ரஸூல் (ஸல்) அவர்கள் கணக்கிட்டு கொள்ளுங்கள் என்று கூறி மாதத்தை பூர்த்தி யாக்குங்கள் என்று பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.
இன்ஷா அல்லாஹ் ஷஃபான் மாதம் ஹிஜ்ரி 1435, 30 நாட்களாக வெள்ளிக்கிழமையுடன் பூர்த்தி அடையும். அடுத்த நாள் 28.06.2014 சனிக்கிழமை அன்று ஃபஜ்ரோடு நோன்பு ஆரம்பமாகும்.
இதில் எந்த சர்ச்சையும், குழப்பமும் இல்லை மார்க்கம் தெளிவானது. அறிவோடும், தெளிவோடும் மார்க்கத்தைப் பின்பற்றி எதிவரும் ரமழானை முழுமையாக அடைய அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக வஸ்ஸலாம்.
VIRF
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506, 077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040
Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/
மேற்படி விடயம் சத்தியமானது, உண்மையானது.இதனை விளங்கிய பொறுப்புள்ளவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள்.
இதற்கு அறிஞர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.
” சத்தியத்தை பின்பற்றுவோர் மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்படுவது, சத்தியத்திலுள்ள குறைபாட்டினால் அல்ல.அதேபோல, போடுபோக்குடையோர் மத்தியில் கருத்தொற்றுமை இருப்பதற்கான காரணம்,அவர்கள் சத்தியத்தில் இருக்கிறார்கள் என்று ஒருபோதும் அமையாது. உண்மையாதெனில் உலக விவகாரங்களில் பல்வேறு தொழிற்பாடுகள், சமூகத்தின் ஒவ்வொரு வகுப்பினரது தரத்திற்கும் ஏற்ப பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.
(அறிஞர் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி)