Puttalam Online
current

றமழான் காலத்தில் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்!

  • 27 June 2014
  • 628 views

எமது ஊரில் காணப்படுகின்ற இயக்கங்கள், பள்ளிவாசல் நிருவாகங்கள், இளைஞர் அமைப்புகள் புனித நோன்பு காலங்களில் வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை தொடர்ச்சியாக வழங்கிவருகின்றன.

Dry rationஅதேபோன்று இன்க்ஷா அல்லாஹ் எமது அமைப்பு (Phd Srilanka) இம்முறையும் இதற்கான ஏற்பாடுகளை செய்ய தயாராகிவருகின்றது.

இம் முறை இதனை ஏதாவது ஒரு அமைப்பு தலைமை ஏற்று செய்தால் மிகச்சிறந்ததாக அமையும். காரணம் இதன் ஊடாக ஒரே குடும்பத்துக்கு பல பொதிகள் செல்வதை தடுப்பதோடு அனைத்து வறிய மக்களையும் உள் வாங்க முடியும். இதனூடாக அனைத்து வறிய மக்ளும் சிரமமின்றி நோன்பு நோற்க ஏதுவாக அமைவதோடு நோன்புப் பெருநாளையும் சிறப்பாக கொண்டாட முடியும்.

எனவே ஏனைய அமைப்புகள் விரும்பும் பட்சத்தில் இம் முறை இதனை பொருப்பேற்று நடாத்த எமது அமைப்பு தயாராக இருக்கின்றது. அல்லது வேரு ஏதேனும் ஒரு அமைப்பு முன் வரும் பட்சத்தில் அவர்களின் கீழ் நாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளோம்.

எனவே இந் நிகழ்வில் பங்கெடுக்க விரும்புபவர்கள் எம்மை தொடர்புகொள்வதோடு உங்களது கருத்துக்கள், ஆலோசனைகளையும் வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All