Puttalam Online
current

புத்தளம் மக்களின் நிதி ACJU யிடம் ஒப்படைக்கப்பட்டது

அலுத்கம, தர்கா நகர், பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, புத்தளம் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூபா 893,052.00  பெறுமதியான காசோலை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வங்கிக் கணக்கில் (2014.07.21) ஆம் திகதி வைப்பு செய்யப்பட்டது.

புத்தளம் பெரியபள்ளிவாசலின் ஏற்பாட்டில் புத்தளம் மக்களும் இளைஞர் குழுக்களும்   இணைந்து மேற்கொண்ட ஊர் தழுவிய ரீதியில்  திரட்டப்பட்ட பணமும் பெரியபள்ளிவாசலில் நேரடியாக வந்து ஒப்படைக்கப்பட்ட பணமும் இத் தொகையில் அடங்குகின்றது.

மேலும், சுவிஸ் நாட்டில் வாழும் முஸ்லிம்களினால் திரட்டப்பட்ட ரூபா 22 இலட்சம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் மாவட்டக் கிளைத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஊடாக அ.இ.ஜ.உ.வுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், இத் தொகையும் புத்தளம் மக்களின் அன்பளிப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அலுத்கம, தர்கா நகர், பேருவளை மக்களுக்காக நிதியுதவி செய்தவர்கள் நிதி சேகரிப்பில் பங்களிப்பு செய்த இளைஞர் குழுக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் புத்தளம் பெரியபள்ளி சார்பாக  நன்றிதெரிவிக்கப்பட்டது.

WAK
Gm Chack Gm Chack 2


2 thoughts on “புத்தளம் மக்களின் நிதி ACJU யிடம் ஒப்படைக்கப்பட்டது

  1. M.N.M. Hijas says:

    ஊடகம் தர்மம் தொடர்பில் கற்றுக்கொள்வது சிறப்பாக அமையும்.

    சில ஆக்கப்புர்வமான கருத்துக்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் கவலைக்குரியது. அக் கருத்துக்கள் பெரிய பள்ளியுடனோ சரி அல்லது வேறு விடயங்களுடனோ தொடர்பாக இருந்தாலும் சரி. ஆக்கப்பூர்வமான விடயங்கள் சுட்டிக்காட்டப்படும் போது அது பிரசுரிப்பதே சரி.

    யானைக்கும் அடி சறுக்குமல்லவா? அதனை சுட்டிக்காட்டினால் இனி சறுக்காது அல்லவா?

  2. Hisham Hussain says:

    மேற்படி செய்தியறிக்கை Hisham Hussain ஆகிய என்னால் தொகுக்கப்பட்டு The Puttalam Times முகநூல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டது. அதன் இணைப்பை PuttalamOnline க்கும் இன்னும் பல வலைத்தளங்களுக்கும் வழங்கியிருந்தேன். அவ் வலைத்தளங்கள் அனைத்தும் செய்தி மூலத்தின் பெயரைக் குறிப்பிட்டிருந்தது. அதனை ஊடக தர்மம் எனச் சொல்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All