Puttalam Online
puttalam-news

ஷவ்வால் மாத பிறை (ஹிஜ்ரி 1435) தொடர்பான ஒர் அவதானம்

oldmoonபிறைகளை தினமும் அவதானித்து கணக்கிட்டு வந்ததன் அடிப்படையில்,

நாளை 25.07.2014 வெள்ளிக் கிழமை  ஃபஜ்ரின் பின்னர் கிழக்கு வானில் ரமழான் மாத 28ம் நாள் பிறை “உருஜூனில் கதீம்” அதாவது இறுதி பிறை தென்படும்.

“இன்னும், சந்திரனை (உலர்ந்து வளைந்த)  பழைய பேரீச்சை மட்டையைப் போல் மீண்டு வரும் வரையில் அதற்கு நாம் பல கட்ட (தங்குமிட) ங்களை ஏற்படுத்தியிருக்கிறோம் (36:39)”.

26.07.2014 அமாவாசை நாளாகும் (CONJUNCTION) 

“அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)) நூல்: ஸஹீஹ் இப்னு ஹீசைமா 1789”

27.07.2014 ல் ஷவ்வால் முதல் நாள் .ஃபஜ்ரில் ஆரம்பமாகும்.

 பிறைகளை சர்ச்சையாக பார்கின்ற புத்திஜூவிகல் ஒன்றை சிந்திக்கக்கூடாதா?

இஸ்லாத்தை பரிபூரணமாக்கிய அல்லாஹ், மனித குலத்திற்கான கலண்டரை (நாட்காட்டியை) அஹில்லக்களை(பிறைகளை) கொண்டு அமைத்துள்ளதாக 2:189 ல் கூறுகிறான்.

“பிறைகள் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர்  கூறும்: அவை மனிதர்களுக்கு காலக் கணக்குகளையும் ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகும்”

இதனை மனித குலத்திற்கு குழறுபடிகள் உள்ளதாக  ஆக்கி இருப்பானா (நவூதுபில்லா)  “நிச்சயமாக நாம் இந்தக் குர் ஆணை மிக்க எளிதாக்கி வைத்திருக்கிறோம் ஆகவே நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா?”  ஷூரா கமர் (சந்திரன்): 17,22,32,40 ஆகிய நான்கு வசனங்களில் அல்லாஹ் திரும்ப திரும்பக் கூறுவது நம் கண்களை திறக்காதா?

ஷஃபான் இறுதிப் பிறை அவதானமும், ரமழான் தீர்மானமும்!

VIRF
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506,  077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040

Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/

 

 ADM 


2 thoughts on “ஷவ்வால் மாத பிறை (ஹிஜ்ரி 1435) தொடர்பான ஒர் அவதானம்

 1. EASTERNBROTHER... says:

  by .abu abdillah.. please READ AND THINK .ALLAAH WILL GUIDE ALL OF YOU……….
  .
  அல்குர்ஆன் ஆலஇம்ரான் : 3:102 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்ள வேண்டிய முறைப்படி பயபக்தி கொண்டு முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க விரும்பும் அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே,
  திட்ட மாகத் துல்லியமாக எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி 1435 வருடத்திய ரமழான் மாதம் 28.06.2014 சனியன்று ஆரம்பித்து 26.07.2014 அதே சனியன்று 29 நோன்புகளுடன் முடிவடைகிறது. 27.07.2014 ஞாயிறன்று 1435 வருடத்திய ஷவ்வால் மாதத்தின் முதல் நாள். அன்று தான் நோன்புப் பெருநாள் தினம்.
  எனவே
  AL-QUR’AAN , அல்பகரா: 2:185 இறைக் கட்ட ளைக்கு முற்றிலும் அடிபணிந்து 28.06.2014ல் நோன்பை ஆரம்பித்து 26.07.2014ல் 29 நோன்பு களுடன் நிறைவு செய்யுங்கள். அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடப்பதன் மூலமே அவனது பொருத்தம் பெற்றுச் சுவர்க்கம் நுழைய முடியும்.

  தூய இஸ்லாமிய மார்க்கத்தை இதர மதங்களைப் போல் மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டுள்ள மவ்லவிகளை நம்பி, கோள்கள் அனைத்துமே அல்லாஹ்வின் முழுக் கட்டுப்பாட்டில் அவற்றிற்குரிய வட்ட வரைகளில் ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் காலங்காலமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன என்று கூறும் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து, சந்திரனின் சுழற்சி மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது;

  மனிதக் கண் அதில் பட்டால்தான் சந்திரன் சுழல ஆரம்பிக்கும்; மனிதக் கண் சந்திரனில் படாதவரை அது அந்த இடத்திலேயே சுழலாமல் நிற்கும்;

  எனவே முதல் பிறை இரண்டு நாள்களும் இருக்கலாம், மூன்று நாள்களும் இருக்கலாம் என்ற இந்த மவ்லவிகளின் கூமுட்டை (ஃபத்வா) தீர்ப்பை நம்பி 28.06.2014 அன்று ரமழான் நோன்பை ஆரம்பிக்காமல், 29 அல்லது 30ல் ஆரம்பிப்பவர்கள் ரமழான் ஒரு நோன்பையோ இரு நோன்புகளையோ பாழ்படுத்தி பெரும் இழப்புக்கு ஆளாகிறார்கள்.

  அதற்காக அவர்களது வாழ்நாள் முழுவதும் நோன்பு நோற்றாலும் இழந்த அந்த நோன்புகளை ஈடுகட்ட முடியாது என்பதைச் சகோதர சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். எச்சரிக்கை!

  அதேபோல் 27.07.2014 ஞாயிறன்று ஷவ்வால் முதல் நாளாகும். பெருநாள் தினமாகும்.

  இந்த மவ்லவிகளை நம்பி அன்று நோன்பு நோற்பது கொடிய ஹராமாகும். அன்று நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வதன் மூலம் மாபெரும் பாவிகளாவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறோம்!

  குர்ஆன் யாசீன்! 36:21 இறைவாக்கு கூலி- சம்பளம் வாங்காமல் மார்க்கப் பணி புரிகிறவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள் என்று உறுதியாகக் கூறுகிறது. சம்பளத்திற்காக மாரடிக்கும் இந்த மவ்லவிகள் நேர்வழியில் இருக்க முடியுமா?
  மற்ற மதங்களின் மதகுருமார்கள் அவர்களை நம்பியுள்ள அப்பாவி மக்களை இறைவனது கட்டளைகளை நிராகரிக்கச் செய்து இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயல்களைச் செய்ய வைப்பது கொண்டு தங்கள் தொப்பைகளை எப்படி நரக நெருப்பால் நிரப்புகிறார்களோ(2:174), அப்பாவி மக்களை நரகில் தள்ளுகிறார்களோ, அதில் அணுவளவும் பிசகாது மவ்லவிகளான முஸ்லிம் மதகுருமார்களும் அற்பமான உலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு, அவர்களை நம்பியுள்ள அப்பாவி மக்களை இறைக் கட்டளையை நிராகரிக்கச் செய்து இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயல்களைச் செய்ய வைத்து, தங்கள் தொப்பைகளை நிரப்புவதோடு அப்பாவி முஸ்லிம்களை நரகில் தள்ளுகிறார்கள். முஸ்லிம்களே எச்சரிக்கை!

  இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் இந்த மவ்லவிகள் யூதர்களையும், கிறித்தவர்களையும் சானுக்கு சான் முழத்திற்கு முழம் பின்பற்றுவார்கள். அவர்கள் ஒரு பொந்தில் நுழைந்தால் இவர்களும் நுழைவார்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்கள்..

 2. friendspx says:

  இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள ரமழான் மாதத்தின் இறுதி பிறை வடிவத்தை, இன்று (25/07/2014) சுபஹ் தொழுகையின் பின் காணகூடியதாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ் கண்ணிய மிக்க உலமாக்களே, புத்திஜீவிகளே இவர்கள் கூறுகின்ற எல்லா நாளும் பிறை பார்த்து மாதங்களை ஆரம்பித்தல் மற்றும் முடிவு செய்தல். என்கின்ற நிலைப்பாட்டை சற்று மீள் ஆய்வு செய்தால் என்ன?

Leave a Reply to EASTERNBROTHER... Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All