Puttalam Online
puttalam-news

வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமுஅலைக்கும் (வறஹ்.)

இம்மாதம் 10.08.2014 ஞாயிற்றுக் கிழமை ஷவ்வால் மாத பிறை 15 ஆகும். இது இந்தியாவின் ஹிஜ்ரி கமிட்டியின் நாட்காட்டி தரும் தகவலாகும். அன்று மஃரிபின் பின்னர் பூரண நிலவு கிழக்கு திசையில் தோன்றி மேற்கு நோக்கிப் பயணித்து அதிகாலை சூரிய உதயத்தின் போது மேற்கில் மறையும். இதை அனைவரும் பார்வையிட முடியும். இது பிறை 15 என்பதை தெளிவாக தெரிவிக்கும் அல்லாஹ்வின் அத்தாட்ச்சியாகும். இந்த பேருண்மையை யாரவது மறுக்க முடியுமா? இந்தியாவின் ஹிஜ்ரி கமிட்டியின் நாட்காட்டி சரியானது என்பதற்க்கும் இது யதார்த்த பூர்வமான ஆதாரமாகும்.

இலங்கையில் பிறையை அறிவிக்கும் அதிகார சபையின் அறிவித்தலின் படி அன்றைய தினம் பிறை 13 று ஆகும். எங்கே தவறு இருக்கிறது என்பது வெள்ளிடை மலை சமூகத்தை குழப்பாதீர்கள்! ஒற்றுமையை குலைக்காதீர்கள்! என்று கூச்சலிடுவோர் உற்று நோக்கி பார்ப்பார்களா? உரிய அதிகார சபையிடம் அல்லது புத்தளம் மாவட்டக் கிளையிடம் விளக்கம் கோருவார்களா?

சகோதர சகோதரிகளே!

நாட்களின் சொந்தக்காரன் ரப்புல் ஆலமீனான அல்லாஹ் ஒவ்வொரு நாளைக்கும் பிறையின் ஒவ்வொரு படித்தரத்தையும் ஆதாரமாக வைத்தே படைத்துள்ளான். இதில் தலையிட்டு தீர்ப்புக் கூற எந்த மனிதனுக்கும் அதிகாரமோ, அருகதையோ இல்லை என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் இறுக்கமாக சொன்னால் இது முஸ்லிம்களின் அகீதாவாகும்.

பிறை தொடர்பான சர்ச்சைகளை இத்துடன் ஒரு முடிவுக்கு கொண்டு வருவது நலம் என்று நம்புகிறோம் மிகச் சரியான பிறை நாட்காட்டியைப் பின்பற்றி எமது அமல்களை உரிய காலத்தில் நிறைவேற்றி அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் அடைய நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

சமூக வலைத்தளங்கள் கொடுக்கும் ஆக்கபூர்வமான அழுத்தங்கள் பிறைகளை அறிவிக்கும் அதிகார சபை தங்களை சீர்செய்து கொள்ள உதவும் என்று நம்புவோமாக.

 

Shawwal 1435

Shawwal 1435

 

வெளியீடு

VIRF
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506,  077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040

Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/

 


One thought on “வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி!

  1. Mohamed SR. Nisthar says:

    நீங்கள் சொல்வது 1000 முறை சரி. ஆனால்ம் இந்த எல்லாம் தெரிந்ததாக நினைக்கும் ஒன்றும் தெரியாத உல(மாக்கள்)க்கைகள் (மனிக்கவும்) இந்த ஜென்மத்தில் திருந்த போவது இல்லை. இன்று காலையில் கூட என் உறவினருடன் பிழையான நாளில் இலங்கையில் பெருநாள் என்று ஏதோ கொண்டாடப் பட்டத்தை சுட்டிக் காட்டினேன். ஆனால் “நாங்கள் தனித்து என்னதான் செய்யமுடியும்” என்று கேட்டகிறார்கள். நியாயமான கேள்வி. ஆனாலும் பிழை என்று தெரிந்து கொண்டு யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக “லைலத்துல் கதிர்” ரையும் தவற விட முடியுமா? இனி ஒவ்வொரு வீட்டிலும் இந்த கலெண்டர் வைக்கப்பட வேண்டும். ஒவ்வருவரும் தாங்களாகவே பிறைகளை கணக்கிட்டு கொள்வதோடு தினமும் வானத்தையும் கொஞ்சம் தலையை உயர்த்தி பார்த்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply to Mohamed SR. Nisthar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All