இம்மாதம் 09.09.2014 செவ்வாய் கிழமை துல்கதா மாத பிறை 15 ஆகும். இது இந்தியாவின் ஹிஜ்ரி கமிட்டியின் நாட்காட்டி தரும் தகவலாகும். அன்று மஃரிபின் பின்னர் பூரண நிலவு கிழக்கு திசையில் தோன்றி மேற்கு நோக்கிப் பயணித்து அதிகாலை சூரிய உதயத்தின் போது மேற்கில் மறையும். இதை அனைவரும் பார்வையிட முடியும். இது பிறை 15 என்பதை தெளிவாக தெரிவிக்கும் அல்லாஹ்வின் அத்தாட்ச்சியாகும். இந்த பேருண்மையை யாரவது மறுக்க முடியுமா? இந்தியாவின் ஹிஜ்ரி கமிட்டியின் நாட்காட்டி சரியானது என்பதற்க்கும் இது யதார்த்த பூர்வமான ஆதாரமாகும்.
இலங்கையில் பிறையை அறிவிக்கும் அதிகார சபையின் (ACJU) அறிவித்தலின் படி அன்றைய தினம் துல்கதா பிறை 13 ஆகும். எங்கே தவறு இருக்கிறது என்பது வெள்ளிடை மலை சமூகத்தை குழப்பாதீர்கள்! ஒற்றுமையை குலைக்காதீர்கள்! என்று கூச்சலிடுவோர் உற்று நோக்கி பார்ப்பார்களா? உரிய அதிகார சபையிடம் விளக்கம் கோருவார்களா?
29 அல்லது 30 நாட்களை கொண்ட மாதத்தில் பூரண நிலவு பிறை 13 இல் சாத்தியமா?
1. “ (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அவை மனிதர்களுக்கு காலக் கணக்குகளையும் ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகும். ” (2:189)
2. “ இன்னும் , சந்திரனை (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்சை மட்டையைப் போல் மீண்டு வரும் வரையில் அதற்கு நாம் பல கட்ட (தங்குமிட) ங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். (36:39)
3. “சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.(55:5)”
சகோதர சகோதரிகளே!
நாட்களின் சொந்தக்காரன் ரப்புல் ஆலமீனான அல்லாஹ் ஒவ்வொரு நாளைக்கும் பிறையின் ஒவ்வொரு படித்தரத்தையும் ஆதாரமாக வைத்தே படைத்துள்ளான். இதில் தலையிட்டு தீர்ப்புக் கூற எந்த மனிதனுக்கும் அதிகாரமோ, அருகதையோ இல்லை என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் இறுக்கமாக சொன்னால் இது முஸ்லிம்களின் அகீதாவாகும்.
பிறை தொடர்பான சர்ச்சைகளை இத்துடன் ஒரு முடிவுக்கு கொண்டு வருவது நலம் என்று நம்புகிறோம் மிகச் சரியான பிறை நாட்காட்டியைப் பின்பற்றி எமது அமல்களை உரிய காலத்தில் நிறைவேற்றி அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் அடைய நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
சமூக வலைத்தளங்கள் கொடுக்கும் ஆக்கபூர்வமான அழுத்தங்கள் பிறைகளை அறிவிக்கும் அதிகார சபை தங்களை சீர்செய்து கொள்ள உதவும் என்று நம்புவோமாக.
வெளியீடு
VIRF
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506, 077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040
Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/
ஒன்றுமே புரியல.. ஒன்னு மட்டும் நல்ல புரியுது… தௌ காரன் நல்ல குழப்பிவிட்டு கூத்து பார்ப்பான் என்று..
..
பிரதர் …( ALI.)…அலி…..
உங்கள் கருத்தை இப்படி வாசிக்கவும்…..
“”””வாசகர்கள் கவனம்…. மாட்டிக் கொள்ளாதீர்……..”””””””””
“”””” ‘தௌ’ காரன்களை நாம் ஆதரிக்காவிட்டாலும், ‘ அலி “’ களோடு ஒத்துப் போவது பெரிய அழிவில் கொண்டு போய் சேர்க்கும். கவனம். “”””””””””
டிவி இல் படம் பாக்கும் நேரத்தில் கொஞ்சம் நேரம் எடுத்து , இறைவனின் வசனங்களை சிந்தியுங்கள்……… நிச்சயம் , அறிவுக் கண் திறக்கும்………..
பிரதர் அலி அவர்களே
உண்மையை மக்கள் தேடி விளங்க விடுங்கள், தௌ காரன்கள் என்று நீங்கள் யாரை குறிப்பிடுகிறிர்கள்? எல்லோரும் (நீங்கள் குறிப்பிட்டவர்கள் உட்பட) பிறை குழப்பத்தில் அல்லல்படும்போது இந்த சரியான கலண்டர் தான் கைகொடுக்க போகிறது, பொறுத்திருந்து பாருங்கள். உண்மையைத் தேடுங்கள். தீர ஆராயாமல் அவசரப்பட்டு கழுத்த கொடுத்தாலும் எழுத்த கொடுக்காதீங்க.
வஸ்ஸலாம்.
வாசகர்கள் கவனம். மாட்டிக் கொள்ளாதீர். ACJU வை நாம் ஆதரிக்காவிட்டாலும் ‘தௌ’ காரன்களோடு ஒத்துப் போவது பெரிய அழிவில் கொண்டு போய் சேர்க்கும். கவனம்.