Puttalam Online
puttalam-news

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்

  • 9 September 2014
  • 962 views

நாளை 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாடு தழுவிய ரீதியில் நுளம்பு பெருகும் இடங்கள் சுத்தப்படுத்தப்படும். அரச, தனியார் கல்விக் கூடங்கள், பல்கலைக் கழகங்கள். உயர் கற்கை நிலையங்கள், விடுதிகள், முன்பள்ளிப் பாடசாலைகள், மேலதிக வகுப்பு நடக்கும் இடங்கள் என்பன 10 ஆம் திகதி சோதிக்கப்படும். வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், அரச, தனியார் நிலையங்கள் 11 ஆம் திகதி பரிசோதிக்கப்படும்.

12 ஆம் திகதி பிரதான நகரங்கள் மற்றும் பொது இடங்கள் சோதிக்கப்படும். 13, 14 ஆம் திகதிகளில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்கள் குடியிருப்புக்கள் சோதிக்கப்படும்.

15 ஆம் திகதி பஸ் நிலையங்கள். பொது இடங்கள், அடக்கஸ்தலங்கள் சோதிக்கப்படுவதுடன் 16 ஆம் திகதி ரயில் நிலையங்கள் வீதி ஓரங்களும் சோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எம்மை நாமே பாதுகாத்துக்கொள்வோம்

d1

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All