Puttalam Online
puttalam-news

“தோழியர்” நூல் அறிமுக விழாவும் மாபெரும் கட்டுரைப் போட்டியும்

  • 9 September 2014
  • 606 views

 

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு அக்குறனை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமிழகச் சகோதரர் நூருத்தீன் அவர்கள்எழுதிய “தோழியர்” நூல் அறிமுகவிழா இடம்பெறவுள்ளது. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களையும் தங்கள் பாடசாலை/மத்ரஸா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் அன்போடு அழைக்கின்றோம். 

விழாத் தலைமை: பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், மெய்யியல்/உளவியல்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். 

  • பிரதம அதிதி உரை: அஷ்ஷெய்க் உஸ்தாத் மன்சூர் நளீமி
  • சிறப்புரை: எழுத்தாளர்/ஊடகவியலாளர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்
  • ஏற்புரை: சத்தியமார்க்கம்.காம் நிர்வாகி சகோதரர் அதிரை ஜமீல்

மாபெரும் கட்டுரைப் போட்டி
மேற்படி நிகழ்வையொட்டி, மாணவர்களுக்கு இடையே அகில இலங்கை ரீதியிலான ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தவுள்ளோம் என்பதை அறியத்தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும், பத்துப்பேருக்கு ஆறுதல் பரிசில்களும் விழா மேடையில் வைத்து வழங்கப்படும். 

கட்டுரைத் தலைப்பு: “ஸஹாபாப் பெண்மணிகளின் சமூகப் பங்களிப்புகள்”

போட்டி நிபந்தனைகள்:

1) ** நபி (ஸல்) அவர்களின் காலத்துப் பெண்களுக்கு நபிகளாரின் சமூக அமைப்பில் பரந்து விரிந்த ஓர் இடம் இருந்தது. அதை இஸ்லாத்தின் தூய மூலாதாரங்களான அல்-குர்ஆனும், சுன்னாவும் அழுத்தமாக உறுதி செய்துள்ளன. நபித் தோழியர், இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைதூது கிடைத்த ஆரம்ப காலத்தில் இருந்தே இஸ்லாத்தின் எழுச்சிக்கும் பரவலுக்கும் ஆண்களுடன் இணைந்து கடுமையாக உழைத்தனர். அந்தவகையில், போர்கள், ஹிஜ்ரத் நிகழ்வு, மக்கா வெற்றி, அறிவுச் செயல்பாடுகள் போன்றவற்றில் ஸஹாபாப் பெண்மணிகளின் பங்களிப்பை விளக்கி சுமார் 1500 சொற்களுக்கு மேற்படாமல் கட்டுரை அமையப்பெறுதல் வேண்டும்.

2) எழுதும்போது, தெளிவான கையெழுத்தில் ஃபுல்ஸ்கப் தாளின் ஒரு புறத்தில் மட்டுமே எழுதுதல் வேண்டும். 

3) கட்டுரைக்குப் புறம்பாகத் தனியான தாளில் மாணவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், பாடசாலையின் பெயர் முதலான விபரங்கள் இடம்பெறுதல் வேண்டும்.

4) கட்டுரை மாணவரின் சுய ஆக்கமே என்பதை பாடசாலை அதிபராலோ மத்ரஸா பொறுப்பாளராலோ உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டிருத்தல் வேண்டும்.

5) கடித உறையின் இடது மூலையில், “கட்டுரைப்போட்டி” எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

6) கட்டுரை வந்தடைய வேண்டிய இறுதித்திகதி: 30/09/2014 , (பிறகு வரும் எந்தக் கட்டுரையும் போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டாது.)

7) நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

8) போட்டியில் வெற்றிபெறுபவர்கள் அவரவர்க்குரிய பரிசை விழாவன்றே வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். பரிசில்கள் எக்காரணம் கொண்டும் தபாலில் அனுப்பிவைக்கப்பட மாட்டாது என்பதைத் தயைகூர்ந்து கருத்திற் கொள்க. 

9) கட்டுரைகள் அனுப்பிவைக்கப்பட வேண்டிய முகவரி: ABDUL HAQ LAREENA, 150/B, BOOVELIKADA, HANDESSA.

உங்கள் மாணவர்கள் இக்கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு பெறுமதியான பரிசில்களை வெற்றிகொள்ள ஆர்வமூட்டுவதோடு, விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் அன்பாய் வேண்டுகின்றோம். நன்றி.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All