Puttalam Online
puttalam-news

துல் ஹிஜ்ஜா-1435 உங்கள் மீள்பார்வைக்கு

hajjபிறைகளை தினமும் அவதானித்து கணக்கிட்டு வந்ததன் அடிப்படையில்,

23.09.2014 செவ்வாய் கிழமை ஃபஜ்ரின் பின்னர் கிழக்கு வானில் துல்கஃதா மாத 29ம் நாள் பிறை “உருஜூனில் கதீம்” அதாவது இறுதி பிறை தென்படும் நாள்.

“இன்னும், சந்திரனை (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்சை மட்டையைப் போல் மீண்டு வரும் வரையில் அதற்கு நாம் பல கட்ட (தங்குமிட) ங்களை ஏற்படுத்தியிருக்கிறோம் (36:39)”.

24.09.2014 புதன் கிழமை மறைக்கப்பட்ட நாளாகும் (CONJUNCTION / NewMoon)

“அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)) நூல்: ஸஹீஹ் இப்னு ஹீசைமா 1789”

25.09.2014 ல் துல் ஹிஜ்ஜா முதல் நாள் .ஃபஜ்ரில் ஆரம்பமாகும்.

பிறைகளை சர்ச்சையாக பார்கின்ற புத்திஜூவிகல் ஒன்றை சிந்திக்கக்கூடாதா?

இஸ்லாத்தை பரிபூரணமாக்கிய அல்லாஹ், மனித குலத்திற்கான கலண்டரை (நாட்காட்டியை) அஹில்லக்களை(பிறைகளை) கொண்டு அமைத்துள்ளதாக 2:189 ல் கூறுகிறான்.

“பிறைகள் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அவை மனிதர்களுக்கு காலக் கணக்குகளையும் ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகும்”
இதனை மனித குலத்திற்கு குழறுபடிகள் உள்ளதாக ஆக்கி இருப்பானா (நவூதுபில்லா) “நிச்சயமாக நாம் இந்தக் குர் ஆணை மிக்க எளிதாக்கி வைத்திருக்கிறோம் ஆகவே நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா?”

ஷூரா கமர் (சந்திரன்): 17,22,32,40 ஆகிய நான்கு வசனங்களில் அல்லாஹ் திரும்ப திரும்பக் கூறுவது நம் கண்களை திறக்காதா?

மேற்கூறப்பட்ட இந்த அடிப்படையை இன்றைய வானியல் விஞ்ஞானம் உண்மைப்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

இதன் அடிப்படையில், இந்திய ஹிஜ்ரி கமிட்டி மனித குலத்திற்கான நாட்காட்டியை வெளியிடுகிறது.

12_hijri_1435_d_hijjah

வெளியீடு

VIRF
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506,  077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040

Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/

 


2 thoughts on “துல் ஹிஜ்ஜா-1435 உங்கள் மீள்பார்வைக்கு

  1. shibly samsudeen says:

    அரபா நோன்பு சனிக்கிழமையும் இல்லை ஞாயிறு தானாம்

  2. EASTERNBROTHER... says:

    இலங்கை முஸ்லிம்களுக்கு,,,,,,,,

    இலங்கை பிறை பாக்கும் குழு , இன்று 26 மஹ்ரிப் பின்னர் ஹஜ் முதல் பிறையை கண்ணால் பாக்க colombo பெரிய பள்ளியில் கூட்டம் போடுகிறார்கள்…… என்ன அறிவு ???

    இந்த மாவ்லவி கூட்ட த் தினால் முஸ்லிம்கள் , ஹஜ் பெருநாள் அன்று அரஃபா நோன்பு பிடிக்கப் போகின்றனர்….. நோன்பு பெருநாள் தினத்தில் பிடிப்பது ஹராம் என்பது இவர்களுக்கு தெரிந்தும் செய்கிறார்கள் என்றால் இந்த கூட்டம் யாருக்கு பயப்படுகிறார்கள் , யாரை பின்பற்றுகிறார்கள்.??

    அரஃபா நோன்பு எண்பஹ்து , அரஃபா நாளில் ,அரஃபா வெளியில் ஹஜ் செய்பவர்கள் ஒன்று திரண்டு இருக்கும்போது , உலகின் மற்ற நாடுகளில் , பகுதிககளில் உள்ளவர்கள் பிடிக்கும் நோன்பு….. இது நடை பெறுவது எதிர்வரும் 03 OCTOBER 2014 , வெள்ளிக்கிழமை ……
    ஆனால் , இலங்கயிலோ ,03 OCTOBER 2014 , வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் நல்ல ரேடியோ பாட்டு கேட்டுகிட்டு , டீவீ ல போட்ற எல்லாப் படத்தயும் TV பட CALENDAR படி பாத்து பொழுதை போக்கி விட்டு , அடுத்த நாள் 04 septemeber, சனிக்கிழமை பெருநாள் அன்று அரஃபா நாள் நோன்பு என்று ஒரு நோன்பை பிடித்து ( முஸ்லிம் மக்களை பிடிக்க வைத்து ) பெரும் அநியாயம் செய்ய போகிறாரகள்…..இந்த பித் ஆன பாவத்துக்கு காரணம் இலங்கை உ . ஷபயின் ” வானவியல் அறிவியல் விஞ்ஞானி ( ??? ) யும் மற்றும் அந்த ஷபயின் மவ்லவிகளுமே….இவர்களுக்கே இந்த பாவம் சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…..

    … .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All