Puttalam Online
puttalam-news

பிறை சர்ச்சை: தேசிய ஷூறா கவுன்சிலின் கவனத்திற்கு

  • 2 October 2014
  • 1,642 views

nshoora

துல்ஹிஜ்ஜா- 05, 1435
செப்டம்பர்-29, 2014

கௌரவசெயலாளர்,
தேசிய ஷூறாகவுன்சில்
கொழும்பு.
அன்புடையீர்!

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹிவபரகாதுஹு.

 பணிவானவேண்டுகோள்

நம் நாட்டு முஸ்லிம்களின் விவகாரங்களை மிகக் காத்திரமான முறையில் அணுகி,கலந்துரையாடி அவற்றிற்கான மிகப் பொருத்தமான தீர்வை ஷரிஆ கண்ணோட்டத்தின் அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த கண்ணியமான சபையாகிய தங்களின் கவனத்திற்கு பின்வரும் விடயத்தை முன்வைக்கின்றோம். இது தொடர்பில் தக்ககவனம் எடுப்பீர்கள் என்றும் நம்புகின்றோம், அல்ஹம்துலில்லாஹ்!

இவ்வருட (ஹி.1435) ஹஜ்ஜுப் பெருநாளை வடஅமெரிக்க பிக்ஹு கவுன்சில், ஐரோப்பிய மார்க்கத்தீர்ப்புக்கும் ஆய்வுக்குமான கவுன்சில்,சவூதி அரசின் பிக்ஹ் கவுன்சில், இந்தியாவின் ஹஜ்ரி கமிட்டிஆகிய உலகிலுள்ள முஸ்லிம்களின் நான்கு பிறை ஆய்வு அமைப்புக்களாலும் ஒக்டோபர் (2014) 4ம் திகதி சனிக்கிழமை என உறுதிசெய்து அறிவித்துள்ளன.

எனினும் நம்நாட்டில் பிறை தொடர்பாக உத்தியோக பூர்வ அறிவித்தலை விடுக்கும் உலமா பெருமக்களைக் கொண்ட சபை ஹஜ் பெருநாளை ஒக்டோபர் மாதம் 6ம் திகதி திங்கட்கிழமை எனஅறிவித்துள்ளது. இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக பலராலும் பேசப்படுகின்றது. துல்ஹஜ் பிறை ஒன்பதில் அரபா பிறை 10ல் ஹஜ் பெருநாள். இது மாற்ற முடியாத மார்க்க நடைமுறையும் நிலைப்பாடும் ஆகும். அல்குர்ஆனில் 2:189ம் வசனத்தின் படிபிறையின் வடிவங்களே நாட்களைஅடையாளப்படுத்துகின்றன. குர்ஆன் கூறுகின்ற ‘மவாகீத்துலின்னாஸ்’ மனிதகுலத்திற்கான நாட்காட்டியின் படிபிறையின் குறித்த ஒருவடிவம் குறித்த அந்தநாளுக்குரியதே. தினமும் பிறையின் வடிவங்களை அவதானித்து, கணக்கிட்டு வருபவர்கள் 10ம் நாளில் பிறையின் வடிவத்தையும் 12ம் நாள் பிறையின் வடிவத்தையும் மிக இலகுவில் அறிந்து கொள்வார்கள். ஏன்! இன்றுள்ள வானியல் விஞ்ஞான அறிவின் மூலம் இதனை மிகத் துல்லியமாக அறியக் கூடியதாகவுள்ளது. அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள இவ்வறிவை புறக்கணித்து நடப்பதுதான் மார்க்கமாகுமா?.

 நம் நாட்டில் பிறையைஅறிவிக்கும் சபையால் கூறப்பட்ட ஒக்டோபர் 6ம் திகதி பிறை 10 ஹஜ் பெருநாள் எனக் கொண்டால் பிறையின் யதார்த்த நிலை எப்படி அமையும் என்பதைஅறிய இவ்வட்டவணையைநோக்குங்கள்.

shoora

 8ம் திகதி பூரண நிலவு தென்படுவதால் நம் நாட்டு பிறைக் குழு அறிவிக்கும் 6ம் திகதி நிச்சயமாக பிறை 10 ஆக முடியாது என்பது தெளிவு.

 1.    பிறைஆய்வு கவுன்சில்களின் அறிவிப்பின் படிஅரபா, ஹஜ் பெருநாள்,அ.தஷ்ரீக் என்பன 3,4,5,6,7ம் திகதிகள்.

 2.    அ.இ.ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பின் படி அரபா, ஹஜ் பெருநாள், அ.தஷ்ரீக் என்பன 5, 6, 7, 8, 9ம் திகதிகள்.

இந்தமிகத் தெளிவான யதார்த்த நிலையை யாரும் மறுக்கமுடியாது. அல்லாஹ் நிதர்சனமாக வானில் காட்சிப்படுத்தும் அவனின் அத்தாட்சிகளுக்கு முரணாக மக்களைஅதன்படி இபாதத்து செய்யும்படி அறிவிப்பது எப்படி இபாதத்தாகும்? குருடர்கள் யானைபார்த்தக் கதையாகாதா?

ஆகவே இத்தகைய தவறுகள் உள்நாட்டுப் பிறையை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் சபைக்கு ஏற்பட முக்கிய காரணம் பரம்பரையாக சந்திரமாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கபின் பற்றி வரும் வழி முறையாகும். மாறாக எக்காலத்துக்கும் இஸ்லாம் பொருந்தக் கூடிய மார்க்கமாக இருப்பதனால் ஷரீஅத்துக்குமுரணின்றி தற்கால வானவியல் அறிவையும் ஏற்று சமூகத்தை வழி நடாத்த மேற்குறித்த சபை முன் வருவது காலத்தின் தேவையாகும்.

இத்தகைய ஒரு குளறுபடி நீண்டகாலமாக நீடிக்கிறது. இவ்வளவு காலமும் இதற்கான முடிவை மேற்குறித்த சபையே அறிவித்திருக்க வேண்டும். அச்சபை ஷரீஆரீதியான ஆதாரங்களோடு தாங்கள் கூறும் அறிவித்தல்கள் சரியானது என இற்றைவரை உறுதிப்படுத்தவே இல்லை.

எனவே இந்நாட்டில் நிறுவப்பட்டுள்ள மிக கண்ணியமான தேசிய ஷூறாசபையிடம் இதனைமிகப் பணிவுடனும் பொறுப்புடனும் சமர்ப்பிக்கின்றோம். இது இந்நாட்டு முஸ்லிம்களின் இபாதத்துடன் தொடர்பான முக்கிய பிரச்சினையாக இருப்பதால் ஷரீஆரீதியாகவும் வானியல் விஞ்ஞான ரீதியாகவும் ஆதாரங்களை சமர்ப்பித்து ஒரு காத்திரமான முடிவை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த முயற்சிப்பீர்கள் எனநம்புகிறோம். இந்நாட்டு முஸ்லிம்களுக்கு சன்மார்க்கரீதியில் தாங்கள் ஆற்றும் மிகப் பெரிய சேவையாக இது அமையவல்ல அல்லாஹ்வை வேண்டி பிரார்த்தித்து முடிக்கின்றோம்.

அனைவருக்கும் நேர்வழிகாட்டஅல்லாஹ் போதுமானவன்.

நன்றி, வஸ்ஸலாம்.

இப்றாஹிம் நிஸார்

செயலாளர்.

VIRF
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506,  077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040

Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All