Puttalam Online
puttalam-news

பிறைகளை சர்ச்சையாக பார்கின்றவர்கள் இதை சிந்திக்கக்கூடாதா?

  • 8 October 2014
  • 1,597 views

pareclipstarfulleclipsஅகில இலங்கை ஜமிய்யதுல் உலமா இந்நாட்டு முஸ்லிம்களுக்கு கடந்த 6.10.2014 புதன் அன்று ஹஜ்ஜுப்பெருநாள் என அறிவித்திருந்தது. அன்று தான் துல்ஹிஜ்ஜா பிறை 10 என்பது அவர்கள் தீர்மானம். அப்படியாயின் 7.10.2014, 8.10.2014, 9.10.2014 ஆகிய நாட்கள் அய்யாமுஷ் தஸ் ரீக் உடைய 11ம்,12ம்,13ம் நாட்களாகும்.

இது சரிதான?  மக்களே! நீங்கள் அவதானித்து பாருங்கள். இன்ஷா அல்லாஹ் 08.10.2014 அன்று மாலை சூரியன் மறைந்ததும் கிழக்கு வானில் பூரண நிலவு தோன்றும். இது பிறை 14 அல்லது 15 லும் ஏற்படும். இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஏற்பாடும் அத்தாட்சியுமாகும். இந்த பேருண்மையை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ, புறந்தள்ளவோ முடியுமா? ஒரு போதும் முடியவே முடியாது.

இதனை உறுதி செய்ய அல்லாஹ்வின் மேலும் ஒரு அத்தாட்சி தான் 08.10.2014 ம் திகதி மாலை 1:47 PM முதல் 7:02 PM வரை நிகழும் சந்திர கிரகணமாகும். சந்திர கிரகணம் எப்போதும் பூரண நிலவின் போதே நிகழும். இதுவும் மறுக்க முடியாத மாபெரும் உண்மையாகும்.

எமது பகுதிக்கு தென்படக்கூடிய நேர அட்டவணை

எமது பகுதிக்கு தென்படக்கூடிய நேர அட்டவணை

ஜமிய்யதுல் உலமாவின் அறிவிப்பின் படி 08.10.2014 அதாவது பிறை 12 ஆகும். ஷரிஆ நிலைப்பாட்டில் சரிதானா? விளக்கம் தருவார்களா?

மக்களே புரிந்து கொள்ளுங்கள் இம்மாத துல்ஹிஜ்ஜாவின் முதல் நாள் தீர்மானத்தில் ஜமிய்யதுல் உலமா தவறியுள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. ஜமிய்யதுல் உலமா வின் வழிகாட்டலுக்கு ஏற்ப அரபா தின நோன்பு நோற்றதும், பெருநாள் கொண்டாடியதும், சரிதானா? .

அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா பின்பற்றும் மாத ஆரம்பத்தை தீர்மானிக்கும் வழி முறை முற்றும் பிழையானது,  என நாங்கள் வலியுறுத்தி கூறி கொள்ள விரும்புகின்றோம்.

இவ்விடயத்தை பலமுறை எடுத்து கூறியும் அவர்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை.

பிறைகளை சர்ச்சையாக பார்கின்ற புத்திஜூவிகல் ஒன்றை சிந்திக்கக்கூடாதா?

இஸ்லாத்தை பரிபூரணமாக்கிய அல்லாஹ், மனித குலத்திற்கான கலண்டரை (நாட்காட்டியை) அஹில்லக்களை(பிறைகளை) கொண்டு அமைத்துள்ளதாக 2:189 ல் கூறுகிறான்.

“பிறைகள் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அவை மனிதர்களுக்கு காலக் கணக்குகளையும் ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகும்”

இதனை மனித குலத்திற்கு குழறுபடிகள் உள்ளதாக ஆக்கி இருப்பானா (நவூதுபில்லா) “நிச்சயமாக நாம் இந்தக் குர் ஆணை மிக்க எளிதாக்கி வைத்திருக்கிறோம் ஆகவே நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா?”

ஷூரா கமர் (சந்திரன்): 17,22,32,40 ஆகிய நான்கு வசனங்களில் அல்லாஹ் திரும்ப திரும்பக் கூறுவது நம் கண்களை திறக்காதா?

10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.

6:104. நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்).

மேற்கூறப்பட்ட இந்த அடிப்படையை இன்றைய வானியல் விஞ்ஞானம் உண்மைப்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

இதன் அடிப்படையில், இந்திய ஹிஜ்ரி கமிட்டி மனித குலத்திற்கான நாட்காட்டியை வெளியிடுகிறது.

அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்

12_hijri_1435_d_hijjah

 

நன்றி, வஸ்ஸலாம்.

இப்றாஹிம் நிஸார்

செயலாளர்.

VIRF
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506,  077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040

Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All