விழுமியம் என்பது தனிநபர், சமூகம், வாழ்க்கை என்பவற்றைப் போஷிக்கின்ற, வளப்படுத்துகின்ற, அர்த்தமுள்ளதாக்குகின்ற மனித குணப்பண்பாகும்.
மனிதனது செயலுக்கு வழிவகுக்குகின்ற விழுமியங்கள் மனிதத்தன்மையினுள் நிலவுகின்ற இயற்கையின் விடயமாகும்.
இவ்விளக்கங்களுக்கு இணங்க பின்வரும் அம்சங்களை விழுமியங்களுக்கு உதாரணங்களாக குறிப்பிட முடியும்.
அன்பு, தைரியம், உண்மை, சாந்தம், சமாதானம், அறிவு, களிப்பு, காருன்யம், கெட்டித்தனம், கேட்டறிதல், நினைவு, சுயகற்றல், அஹிம்சை, ஒழுங்குமுறை, சமத்துவம், இன்சொல், சினேகபூர்வம், நேர்மை என்பனவாகும்.
கல்வியின் மூலதத்துவம் அல்லது விழுமியங்களை இன்றைய கல்வியலாளர்கள் பின்வருமாறு பட்டியலிடுகின்றனர்.
1. மானசீகபாலம் mental strength
2. ஆன்மிக நுண்ணறிவு spiritual intelligence
3. தன்னம்பிக்கை self confident
4. சுய-மதிப்பு self esteem
5. சுய முன்னேற்றம் self progress
6. ஒழுக்க வளர்ச்சி moral development
7. மாற்றங்களை உருவாக்குதல் assimilating change
8. கருத்து வேற்றுமையை அங்கீகரித்தல்
9. சமூக சமத்துவம் social equality
10. சமூக அபிவிருத்தி social development
11. சமூக நீதி social justice
12. பூகோள சகோதரத்துவம் global solidarity
13. மனித கண்ணியம் Human dignity
14. சூழல் நட்புடைமை Eco friendship
15. புதிய கண்டுபிடிப்பு new discovery
16. கூட்டுடைமை co-operation
இவற்றுள் முதல் ஆறு அம்சங்களும் தனி மனித ஆளுமை வளர்ச்சியில் மிகுந்த செல்வாக்குச் செழுத்துகின்றன. இத்தகைய அம்சங்கள் இன்றைய கல்வி மூலம் பூரணப்படுத்தப்படாததால் கோடிக்கணக்கான தலைகளை காண முடிந்தாலும் நல்ல மனித வளங்களை காண முடியாதுள்ளது. எனவேதான் இத்தகைய தனி மனிதனுக்கு அவசியமான விழுமியங்கள் முன்னுரிமை அளிக்கப்படவேண்டியவை என்ற கருத்து பலம் பெற்றுள்ளன.
அவ்வாறே 7 முதல் 11 வரையான அம்சங்கள் உயர்ந்த சமூக உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமான அம்சங்களாகும். கல்வியினூடாக இது அடையப்படுமாயின் விழுமியமுள்ள சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவது மிக இலகுவான காரியமாக மாறிவிடும்.
மாற்றங்களை உள்வாங்குதல், கருத்து வேற்றுமையை அங்கீகரித்தல் போன்ற விழுமியங்கள் செத்துப்போன சமூகத்தில் முன்னேற்றம் என்ற வாடையை கூட நுகரமுடியாமல் உள்ளன என்பதை யாராலும் எளிதாக மறந்துவிட முடியாது.
12முதல் 16 வரையான அம்சங்கள் உலகலாவிய அமைதிக்கும் சமாதானத்துக்கும் அவசியமானவை என கல்வியளாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
MMM