Puttalam Online
star-person

மௌலவி R.A. சமீன் நவீன காஸிமிய்யாவின் முன்னோடி!

S.I.M. AKRAM (Casimi)

———————————–

மர்ஹூம் மௌலவி சமீன் அவர்கள் மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரியின் பழைய மாணவராவார். மார்க்க கல்வியை இந்தியாவில் உள்ள அரபுக் கல்லூரியில் கற்று ஆலிமாக பட்டம் பெற்று வெளியேறினார்கள்.

Sameen mouஇலங்கையை வந்தடைந்த அவர்கள் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் ஆசிரியராக சேவையாற்றினார்கள். புத்தளம் காஸிமிய்யா பொருளாதார நெருக்கடி காரணமாக 1984 – 1985 காலப்பகுதில் மூடப்பட்டு இருந்தது. பின்னர் 1985 ம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. காஸிமிய்யாவின் அப்போதைய அதிபர் மர்ஹூம் சேகு மதார் அவர்களுக்கு பல வழிகளிலும் தோல் கொடுத்து மதுரஸாவை வழி நடாத்திச் சென்றார்கள்.

பொருளாதார கஷ்டம் காரணமாக மதுரஸாவின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மதுரஸாவில் கைவிடப்பட்டிருந்த பெரிய சமையல் அறையில் முட்டையிடும் கோழிகளை வளர்த்து அதில் வரும் இலாபத்தைக் கொண்டு சில செலவுகளை சமாளிக்க உதவினார்கள். நாடு பூராகவும் 100 ரூபா 50 ரூபா பெறுமதியான டிக்கட்டுகளை அச்சடித்துக் கொண்டு அவர்களுடைய மோட்டார் சைக்கிளிலேயே விற்பனை செய்து வருவார்கள். பின்னர் கலன்டர் விற்பனையிலும் ஈடுபட்டு தன்னாலான பங்களிப்புகளை செய்து வந்தார்கள்.

காஸிமிய்யாவை பாரம்பரிய மதுரஸா முறையில் இருந்து நவீன முறைக்கு மாற்றினார்கள். மதுரஸாவில் வகுப்பறை முறைமை, வாசிகசாலை, கல்விச் சுற்றுலா, ஆற்றுப் பயணம்(பயிற்சி முகாம்), சீருடை முறை, தவணைப் பரீட்சைகள், மாதாந்தப் பரீட்சைகள், போட்டி நிகழ்ச்சிகள், விவாத அரங்குகள் என பல சீர்திருத்த முன்னெடுப்புகளை அமுல்படுத்தி நவீன காஸிமிய்யாவின் முன்னோடியாக திகழ்ந்தார்கள்.

மௌலவி சேகு மதார் அவர்களின் வபாத்திற்குப் பின் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் மதுரஸாவின் அதிபராக பொறுப்பேற்றதன் பின் காஸிமிய்யா துரித வளர்ச்சியை நோக்கி வீறு நடைபோட்டது.

உதவி அதிபராக இருந்த மௌலவி  யஹியா அவர்கள் சுகயீனம் காரணமாக தனது சேவையை இடைநிறுத்திக்கொண்ட போது மதுரஸாவின் உதவி அதிபராக கடமையாற்றினார்கள். பின்னர் நிகவரட்டிய அமீனிய்யா அரபுக் கல்லூரியில் அதிபராக சில வருடங்கள் சேவையாற்றியார்கள். தனது சுகயீனம் காரணமாக மீண்டும் காஸிமிய்யாவில் தனது சேவையை தொடர்ந்தார்கள். எனினும் கடுமையான சுகயீனம் காரணமாக தனது ஒரு காலையும் இழந்த அவர்களுக்கு இரு சிறு நீரகங்களும் செயலிழந்து காணப்பட்டது. எனினும் அவர்களுடைய முகத்தில் சாந்தமும் அல்லாஹ்வுடைய சோதனையை பொருந்திக் கொள்ளும் தன்மையும் காணப்பட்டது.

யாருடைய மனமும் புண்படும் அளவிற்கு வார்த்தைகள் அவர்களுடைய வாயிலிருந்து வெளிவராது. நான் மாணவராக ஆசிரியராக சுமார் 20 வருடங்கள் காஸிமிய்யாவில் அவர்களோடு இருந்துள்ளேன். இவர்களைப் பற்றி ஆசிரியர்களோ மாணவர்களோ எக்குறையும் கூறியதுமில்லை. சமீன் மௌலவி என்றால் தனி மரியாதை அனைவரிடத்திலும் காணப்பட்டது.

அல்லாஹ்வுடைய புனித அல்குர்ஆனையும் மார்க்க அறிவையும்; 28 வருடங்கள் பல நூறு மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த அவர்களை இன்று அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருடைய பாவங்களை மன்னித்து கபுருடைய வாழ்கையை இலேசாக்கி ஜன்னதுல் பிர்தொஸ் எனும் சுவனத்தில் நுழைவிப்பானாக!

 


2 thoughts on “மௌலவி R.A. சமீன் நவீன காஸிமிய்யாவின் முன்னோடி!

  1. hassan says:

    i am one of student from casimiya. he is the best …..ya allah forgive his big and small sins …ya allah give him jannathul firdaws ………AAMEEN

  2. Aneen Mahmood says:

    மௌலவி சமீன் அவர்களின் நற்கருமங்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டு, உயர்ந்த சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌசை அவர்களுக்கு வழங்குவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All