Puttalam Online
puttalam-news

முன்னால் ஜனாதிபதியை புகழ்ந்தும் இகழ்ந்தும்.!

mahinda

-கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்-

அன்பு ஜனாதிபதி நீ
அசிங்க ஜனாதிபதி நீ
அற்புதங்களும் செய்தாய் நீ
அருவருப்புக்களையும் விதைத்தாய் நீ

பள்ளிகளில் சத்தமாக பாங்கு கேட்க
அனுமதியளித்ததும் உன் காலப்பகுதியில் தான்
பள்ளிகளை பகிரங்கமாக உடைக்க
அனுமதியளித்ததும் உன் காலப்பகுதியில் தான்

பயங்கரவாதி புலிகள்
அழிக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்
பயங்கர கிரீஸ் மனிதர்கள்
உருவாக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்

வீதி அபிவிருத்திகள்
அதிகரிக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்
விலைவாசிகள்
அதிகரிக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்

அதிகமான அபிவிருத்திகள்
செய்யப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்
அதிகமான கடன்கள்
வாங்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்

வியாபார நிறுவனங்கள்
பல திறக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்
வியாபார நிறுவனங்கள்
பல உடைக்கப்பட்டதும் உன் காலப்பகுதியில் தான்

அதிக இன்பம்
அடைந்ததும் உன் காலப்பகுதியில் தான்
அதிக துன்பம்
அடைந்ததும் உன் காலப்பகுதியில் தான்

உடைமைகள் பல உதயமானதும்
உன் காலப்பகுதியில் தான்
ஊழல்கள் பல உதயமானதும்
உன் காலப்பகுதியில் தான்

கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை
வழங்கியதும் உன் காலப்பகுதியில் தான்
கசினோ கலாச்சாரத்திற்கு அனுமதி
வழங்கியதும் உன் காலப்பகுதியில் தான்

அன்பு ஜனாதிபதி என்றிருந்தாய்
அசிங்க ஜனாதிபதியானாய்
அற்புதங்கள் செய்யத்தவற வில்லை
அருவருப்புக்களையும் விதைக்க மறக்கவில்லை.

நன்றி மறக்கும் சமூகமல்ல
நம் சமூகம்
நன்றி சொல்கிறோம்
நன்றாக ஆட்சி செய்ததற்கு

வெறுக்கிறோம்
வென்றமமதையில்
வெள்ளைக்காரனாய்
வெற்றாட்சி செய்தவுன்னை..

 WAK


5 thoughts on “முன்னால் ஜனாதிபதியை புகழ்ந்தும் இகழ்ந்தும்.!

  1. Wasim Akram MAB says:

    நண்பர்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்… உமது தட்டிக்கொடுப்புகள் இருக்கும் வரை எமது பயணங்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.. இன்ஷா அல்லாஹ்

  2. nazeem says:

    nalla kavithay vaaalththukkal

  3. மனிதன் says:

    வசீம் ! என்மனதுள் புதைந்து என்னை உறுத்திக்கொண்டிருந்த உண்மைகளை, என் மனசாட்சி, மனிதத்திட்கு பறைசாற்ற நினைத்தவற்றை மிக அழகாக அர்த்தப்படவைத்தாயடா !

  4. S.Suresh says:

    மிக அழகான அர்த்தமுள்ள காலத்தின் கவிதை……உண்மைக்கு எப்போதும் தலைவணங்குகிறேன், இதை எழுதியவர்க்கும் தமிழுக்கும்தான்.

    பேரினவாத அல்லது ஊழல் ஆட்சி எப்பவெல்லாம் தலைதூக்குமோ அப்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, தமிழ் பேசும் நாமும் நமது கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்தால் ஆட்சி மாற்றம் மட்டுமன்றி சிறுபான்மை இனத்தவர் மீதான அழுத்தங்களிலும் ஒடுக்குமுறையிலும் நிச்சயம் மாற்றம் வரும்.

  5. Aslam Abubaida says:

    வசீம் அக்ரம், நீங்க பெரிய கவின்ஜரப்பா.

    வறண்ட பாலை நிலத்தில் நீ இருந்தாலும் உன் கவிதைகள் வரண்டவைகளல்ல. படிப்பவர்களின் மனதை தொடும் உன் கவிதைகள் என்றும் எம் நெஞ்சங்களில் வாழுமப்பா.

    மகிந்தாவைப் பற்றிய உனது கவிதை பிரமாதமப்பா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All