Puttalam Online
puttalam-news

இரத்தக்கொதிப்பு பற்றி அறிந்துக்கொள்வோமா..!

  • 19 January 2015
  • 1,478 views

blog_high_blood_pressure

இரத்தக்கொதிப்பானது இன்றைய அவசர உலகில்  அனைவருக்கும் உள்ள ஒன்று.   வேலை பளுவின்  காரணமாகவும், ஓயாத  மன உளைச்சலின் காரணமாகவும் இவை ஏற்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஓரளவு இயற்கையிலேயே ரத்த அமுக்கம் இருக்கும் . இவை பரம்பரை மூலமாகவும் ஏற்படக்கூடியது தான். இதனை முழுவதுமாக தவிர்க்க முடியாது மாறாக உணவு கட்டுப்பாடு மற்றும்  சில சுலப பயிற்சியின் மூலம் கட்டுக்குள் வைக்கமுடியும்.

இரத்த அழுத்தம் என்பது இரத்தக் குழாய்களில் உள்ள ரத்தம், குழாய்களின் சுவர்களில் அழுத்தும் அழுத்தமாகும். இவை இயற்கையான அளவில் இருந்து மாறுபடுவது, ரத்த குழாய்களின் நிலைமையையும் ,அவற்றில் உள்ள ரத்தத்தின் அளவையும், இருதய துடிப்பின் பலத்தையும்  பொறுத்தே அமைகின்றன.

நமது இரத்தக்  குழாய்களின் சுவர்கள் இரண்டு வகையான நார்களால் ஆனது. ஒன்று மீள்சத்தி நார்கள் மற்றொன்று தசை நார்கள். இதயம் சுருங்கி இரத்தத்தை அழுத்தித் தண்ணீர் பம்ப் போல அதை குழாயிக்குள் செலுத்துகையில் மீள்சக்தி நார்கள் நீள்கின்றது. இதய துடிப்பின் வேகம் அடங்கியதும், அவை சுருங்குகின்றன. இப்படி இதயத்திற்கு மாறி மாறி நீண்டும் சுருங்கியும் இவை இரத்தத்தை ஓயாது அமுக்கிக் கொண்டே  இருக்கின்றன. நமது இதயத்தின் ஒரு துடிப்புக்கும் அடுத்த துடிப்புக்கும்  இடையே இந்த அழுத்தத்தின் வலு படிப்படியாக குறையும். மீண்டும் அடுத்த துடிப்பு துவங்கியவுடன் அவை மீண்டும் அதிகமாகும்.

இதயமானது துடிக்கும் சமயத்திலேயே ஏற்படும் அழுத்தம் குலைச்சுருக்க அழுத்தம்(Systolic Pressure) என்றும் அது விரியும் போது உள்ளது குலை விரிவு அழுத்தம்(Diastolic Pressure) என்றும் அழைக்கப்படுகிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All