Puttalam Online
sports

மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி

  • 20 January 2015
  • 620 views

சம்மாந்துறை தக்கிலோ நண்பர்கள் நற்பணி மன்றம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஐ.எல்.எம்.மாஹிரின் அணுசரணையில் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை எஸ்.எஸ்.பீ விளையாட்டுக் கழகம் 3 ஓட்டங்களால் வெற்றிவாகை சுடி சம்பியனானது.

அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் பத்து அணிகள் கலந்து கொண்டன.

இக்கிறிக்கட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சம்மாந்துறை எஸ்.எஸ்.பீ விளையாட்டுக் கழகமும், சம்மாந்துறை சென்னல் வோரியல் விளையாட்டுக் கழகமும் தெரிவாகின.தக்கிலோ நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் எஸ்.எம்.கிதாயதுள்ளாஹ் தலைமையில் சம்மாந்துறை அல்-அர்சாத் முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற இந்நிகழ்வில் நௌபா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அல்-அர்சாத் முஸ்லிம் மஹா வித்தியாலய பழைய மாணவருமான எம்.ஜே.எம்.இர்பான் மௌலவி, சம்மாந்துறை சிப்ஹா அமைப்பின் ஸ்தாபக தலைவர் எஸ்.எல்.எம்.நாஸர், அகில இலங்கை சோனகர் அமைப்பின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.சீ.எம்.சகீல், சம்மாந்துறை முபீன் மோட்டர்ஸ் உரிமையாளர் ஏ.எம்.முபீன், சம்மாந்துறை யூ.எஸ்.என். வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் என்.உஸ்மான், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All