Puttalam Online
puttalam-news

இஸ்மாவும் டெப்பும் – நிமிடக்கதை

  • 21 January 2015
  • 1,132 views

Boy with a tablet: advertising innovation technology

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் – கத்தாரிலிருந்து]

அத செத்து நேரத்துக்கு வச்சுட்டு வந்து சாப்பிடுடா” என்ற ரஹீமாவின் சத்தத்தை இலேசாகவும் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. அவனுக்காக வைத்த உணவு கடைசியில் பூனைக்கு உணவானது.

“மணி நாளரையாகுது இன்னும் வெளையாட போகலையா” என்ற ரஹீமாவுக்கு “இல்லம்மா சோம்பலா இருக்குது” என்றே பதில் வந்தது இஸ்மாவிடமிருந்து.

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அவனது மாமா அவனுக்கு பரிசாக கொடுத்த டெப்பினாலேயே இத்தகைய மாற்றம் அவனில்.

எந்நேரமும் டெப்பும் கையுமாக மூலையில் முடங்கிப் போன இஸ்மாவை கண்டு கவலையோடு அவனை நினைத்தப்படியே உறங்கிப் போனாள் ரஹீமா. இஸ்மாவோ எவ்வித கவலையுமின்றி டெப்பில் மூழ்கிக் கொண்டிருந்தான் நள்ளிரவு கடந்தும்..


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All