சலீம் பைரூஸ் பாலைக்குளி
வட மாகாணத்தின் முசலி பிரதேசத்தின் தென் பகுதியில் மன்னார் புத்தளம் வீதியில் அமைந்துள்ள மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குளி, முள்ளிக்குளம் மற்றும் ஹுனைஸ் நகர் ஆகிய கிராமங்களின் தரம் 6 க்கு மேற்பட்ட மாணவர்கள் கற்பதற்கான பிரதான பாடசாலையாக காணப்படும் அல் ஜாசிம் வித்தியாலயத்தில் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது.
இதனை இதனை நிவர்த்திசெய்யக்கோரி அப்பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், புத்தளம் மன்னார் வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுப்பார்களா ?