Puttalam Online
puttalam-news

பெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை

  • 24 January 2015
  • 1,037 views

z_pxiv-Saroshi

நாட்டின் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க, புதிய அரசாங்கத்தின் கொள்கையாக்களில் பெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு, இலங்கை பெண்கள் வர்த்தக சம்மேளனம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் பெண் தொழிலாளர் படையின் பங்களிப்பு, எமது நாட்டின் தற்போதைய சனத்தொகையின் 34 சதவீதத்துக்கும் குறைவானது என பெண்கள் கைத்தொழில், வர்த்தக சம்மேளனத் (WCIC) தலைவர் ரிபா முஸ்தபா சுட்டிக்காட்டுகின்றார்.

மேலும் அவர் எமது நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையானோர் பெண்களாக இருப்பதனால் குறிப்பாக இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது  முக்கியமானது என கைத்தொழில், வர்த்தக அமைச்சர், ரிசாத் பதியுதீனிடம் தெரிவித்துள்ளார்.

இச் சம்மேளனம் (WCIC) 175 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் இலாப நோக்கற்ற ஒரு அமைப்பாகும் அத்துடன் பெண் தொழில்முயற்சியான்மை உடையோரை வணிக துறையில் உள்ளீர்ப்பதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வளர்ந்துவரும் பெண் தொழில்முயற்சியான்மையாளர்களின் நிதி மற்றும் பொருளாதார சுமைகளை தளர்த்துவதற்கான சிறந்த வழிமுறைகளை பரிந்துரைக்கின்ற ஒரு கொள்கையும் இவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் குறைந்தபட்சம் 25 சதவீதமான பெண் பிரதிநிதிகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் இணைத்துக் கொள்வதற்கான சட்டமொன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All