Puttalam Online
star-person

அறிவியல் மரபுக்கு வித்திட்ட பேரறிஞர் சைமன் காசிச் செட்டி 01

  • 6 February 2015
  • 818 views

இலங்கையின் அறிவியல் மரபுக்கு வித்திட்ட  பேரறிஞர் சைமன் காசிச் செட்டி –  01
simon 1 அந்நிய நாட்டவரின்  ஊடுருவல் இலங்கையில் ஏற்பட்ட போது, சுதேச மக்கள் சுய உரிமைகளின்றி மேற்கு நாட்டாரின் எண்ணங்களுக்கு ஏற்ப தாளம் போடுவோராக, அடிமைகளாக வாழ நேரிட்டது.
அவர்களின் சமயத்தைப் பரப்புவதையும், ஆதிக்கத்தை நிலை நாட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு கல்வி அமைப்புக்களையும் உருவாக்கினர். சுதேசிகளுக்கு அரசியலில் – நிர்வாகங்களில் பங்களிப்புக்கள் தரப்படவில்லை.
ஒல்லாந்தரின் பிடியிலிருந்து ஆங்கிலேயருக்கு அதிகாரம் கையளிக்கப்பட்ட கால கட்டத்தில் பேரறிஞர் காசிச் செட்டி பிறந்து வளர்ந்தார்.
காசிச் செட்டியின் முன்னோர்கள் தென்னிந்தியா திருநெல்வேலியைச்  சேர்ந்தவர்கள்.கத்தோலிக்க மதத்தவராகிய கெஸ்பர் காசிச் செட்டி என்பவர் 1620ம்  ஆண்டில் கொழும்பில் வசித்து வந்துள்ளார்.image (1)
சைமன் காசிச் செட்டியின் பாட்டனாராகிய அட்ரியன் காசிச் செட்டிக்கு 1779ம் ஆண்டில் கப்ரியல் என்ற மகன் பிறந்தார்.அட்ரியன் புறட்டஸ்தாந்து மதத்தைத் தழுவியதனால் கெப்ரியலும் அம்மதத்தையே பின்பற்றினார். ஆரம்பத்தில் டச் மொழியில் கல்வி கற்ற போதும் பின்பு ஆங்கிலத்தைக் கற்று அறிவு பெற்றார்.1805ம் ஆண்டில் கப்ரியல் காசிச் செட்டி கற்பிட்டியில்  முதலியாராக நியமிக்கப்பட்டார்.
 டச் அரசாங்கத்தின் கீழ் அதிகாரப் பதவியை வகித்து வந்த சைமன் டி நொஸய் நோ என்பவரின் மகளை கப்ரியல் காசிச் செட்டி மணஞ்செய்தார். அத்தம்பதியருக்கு 1807ம்  ஆண்டு மார்ச் மாதம் 21ம்  திகதி சைமன் காசிச் செட்டி பிறந்தார்.1809ம் ஆண்டு பெப்ரவரி 7ம் திகதி கொழும்பில் ஞானஸ்தானம் செய்து வைக்கப்பட்டார்.
சைமன் தமது ஆரம்பக்கல்வியை கற்பிட்டி சென்ற் பீட்டர்ஸ் தேவாலயத்துடன் இணைந்திருந்த தமிழ்ப் பாடசாலையில் பெற்றார், அவரது பதினாறாவது வயதில் அவரைக் கொழும்பிற்கு அனுப்பி கல்வி கற்பிக்கத் தந்தையருக்கு விருப்பமிருந்தும் மகனைப் பிரிந்திருக்க முடியாதென தாயாரின் மறுப்புரை காரணமாக சைமன் கற்பிட்டியிலேயே தங்கினார்.உயர் கல்வியைக் கற்பிக்கக் கூடிய எவ்வித பாடசாலையும் இல்லாத பின் தங்கியிருந்த கற்பிட்டியில் இவரது தகப்பனார் இவருக்குத் தனிப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பித்தார்.
image
      1821ம் ஆண்டில் கற்பிட்டிக்கு விஜயம் செய்திருந்த சேர் எட்வர்ட்ஸ் பாண்ஸ் ஆளுநர் சைமனைக் கூட்டிச் சென்று இங்கிலாந்தில் கல்வி கற்பிக்க எண்ணிய போது அதுவும் தாயாரின் விருப்பமின்மையால் தடைப்பட்டது. ஆயினும் தளரா முயற்சியுடன் சில ஆசிரியர்களின் துணையுடன் தானாகவே கல்வி பயின்றார்.
                             கப்ரியல் காசிச் செட்டியின் கல்லறை  
20150310_105658

 

20150310_105512

 

                                                                                                                                                                                                                                                                                       
  தொடரும்…                             


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All