[கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்]
அகவை எழுபதை
அடையும்
அன்னை சாஹிராவே
உன்னில் வளர்ந்த
உன் புதல்வன்
வந்துள்ளேன்
வாழ்த்து தனை சொல்ல..
சாஹிரா எனும்
நாமம் கொண்டு
நீ சாதித்ததோ பல
சரித்திரத்தில் இடம்பிடிக்க
இன்னும் உத்வேகம்
கொள்வாய் அன்னையே
புதியதொரு வரலாறு
படைப்போம் புறப்படு அன்னையே..
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இயற்கையின் நியதியே..
நன்மையான நினைத்து
தீமையானதை மறந்துவிடு
இனியும் பின்னிற்கலாகாது
இன்றே புறப்படு..
விளையாட்டில்
விடுப்பட்டு போன
பெயரை மீண்டும்
பெற்றிடவே
புறப்படு அன்னையே
இன்றே புறப்படு..
கல்வியில் கொடிக்கட்டி
பறந்த உன் பெயரை
மீண்டும் உயரப்பறக்க விட
புறப்படு அன்னையே
இன்றே புறப்படு..
நல்லொழுக்கமுள்ள
நன்மனிதர்களை
உருவாக்க
உழைத்திடு அன்னையே
இன்றே உழைத்திடு..
அன்னையின் நற்பெயரை
பாதுக்காக
புறப்படு புதல்வனே
இன்றே புறப்படு..
WAK
ஷா ஷா