Puttalam Online
special-articles

இலங்கையின் தேசிய சின்னங்கள் -தேசியக் கொடி

  • 13 February 2015
  • 882 views

Z . A . ஸன்ஹிர் அவர்களால் 1997ல் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் தேசிய சின்னங்கள்’ என்ற கையேட்டில் இருந்து இத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. 

தேசியக் கொடி 

Banner  carried by King Dutugemunu to battle on a fresco in Dambulla Temple
தேசியக் கொடி ஒரு நாட்டின் இறைமை, ஒற்றுமை, தேசிய மேன்மை என்பவற்றை எடுத்துக்காட்டும் உயர்ந்த சின்னமாகும். இலங்கையின் தேசியக் கொடி சிங்கக் கொடியாகும்.விஜயனின் இலங்கை விஜயத்தைக் குறிப்பதாக இந்தியாவின் சாஞ்சி தூபியில் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்தில் சிங்கத்தைக் கொண்ட ஒரு கொடியும் உள்ளது. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட  கொடிகளுள் புராதானமானது தம்புள்ளை          விகாரையிலுள்ள துட்டகைமுனுவின் கொடியாகும். இதிலும்சிங்கத்தின் உருவம் ஒன்றுள்ளது.
Banner carried by King Dutugemunu to battle on a fresco in Dambulla Temple
 சிங்கக் கொடி, பாரசீகர்கள் இலங்கையுடன் வர்த்தக உறவுகளில் ஈடுபட்டிருந்த சமயம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.1951 பெப்ரவரி ஞாயிற்றுக்கிழமை  ” The Times Of Ceylon ” பத்திரிகையில் திரு எஸ்.ஏ.என். நிக்லஸ்    என்பார் இது பற்றிய ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

Dambulla-2

                     இலங்கையின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க என்ற பெயரில் ஆட்சி செய்த கந்தசாமியின் ஆட்சிக் காலத்தில் ஒரு, கோரளைக் கொடியாக சிங்கக் கொடி இருந்து வந்துள்ளது. டச்சு ஏகாதிபத்தியத்திலிருந்து இலங்கையைத் தம் வசமாக்கிய ஆங்கிலேயர் அவர்களின் கொடியை ஏற்றிவைத்தனர். ஆங்கிலக்கொடியைக்கிழித்தெறிந்துவிட்டு சிங்கக் கொடியை ஏற்றிய வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரருக்கு ஆங்கிலேயர் மரணதண்டனையளித்தனர்.
sri-wikrama-flag-2
 இலங்கைக்கு தேசியக்கொடியொன்று அவசியம் என்ற கருத்து சுதந்திரத்துக்கு முன்பிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.அரசாங்க சபையில் இதற்கான முதற் பிரேரணையை 1948 ஜனவரி 14ல் மட்டக்களப்புத் தொகுதி பாராளுமன்றஉறுப்பினர்        முன்வைத்தார்.அப்பிரேரணை பின்வருமாறு அமைந்திருந்தது.

220px-Sri_Vikrama_Rajasinha

 

 

தொடரும்…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All