இவ்வருடம் பெப்ரவரி 2ஆம் திகதி முதல் பாத்திமா மகளிர் கல்லூரியில் நடைபெற்று வந்த விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று (13.02.2015) அதிபர் திருமதி சுமையா ரிஸ்வானின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது .
இந்நிகழ்வில் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் , ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், புத்தள நகர பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் , புத்தளம் வலய ஆசிரிய ஆலோசகர்கள், கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் திரு .அனீஸ் ,புத்தளம் வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் திரு மஹ்ரூப் இவர்களுடன் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களும் கலந்து, சிறப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இறுதி நாள் நிகழ்வுகளின் நடுவர்களாக ஆசிரியர்களான திருமதி வரதராஜன், திருமதி மானல், திரு அக்மல் ஆகியோர் கடைமையாற்றினர். இறுதி நாள் விளையாட்டு போட்டிகளாக பலூன் ஓட்டம், சாக்கோட்டம் , சமநிலை ஓட்டம் மற்றும் பல சுவாரஸ்யமான போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இறுதியாக அனைவரையும் கவர்ந்த நான்கு இல்லங்களினதும் தேக அப்பியாசம் ( drill display ), மற்றும் அணிநடை நிகழ்சிகளும் இடம்பெற்றன. இம்முறை தேக அப்பியாச போட்டியில் முறையே பவாசியா, ஜமாலியா ,சமாலியா, கமாலியா இல்லங்கள் 1ஆம், 2 ஆம், 3ஆம் இடங்களை பெற்றுக்கொண்டன. அணிநடையில் முறையே ஜமாலியா, கமாலியா, சமாலியா, பவாசியா இல்லங்கள் 1ஆம், 2 ஆம், 3ஆம் இடங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை 321 புள்ளிகளைப் பெற்று ஜமாலியா இல்லம் முதலிடத்தையும் 312 புள்ளிகளைப் பெற்று பவாசியா இல்லம் இரண்டாமிடத்தையும் 3ஆம் , 4ஆம் இடங்களை சாமாலியா மற்றும் கமாலியா பெற்றுக்கொண்டது.
புள்ளிகள் அறிவிக்கப்பட்டு பரிசில்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டதன் பின்னர் ஒரு சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது. இப்பாடசாலையின் அதிபர் திருமதி சுமையா ரிஸ்வான் அவர்கள் இவ்வருடம் ஓய்வு பெற இருப்பதால் இவரின் தலைமையில், வழிகாட்டலில் நடைபெற்ற இவ்விளையாட்டு போட்டியை சிறப்பிக்குமுகமாக இப்பாடசாலையின் ஆசிரியர் திரு ஆசாத் அவர்களால் வழங்கப்பட்ட கேக் அதிபரினால் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து அனைவரினதும் மனதை தொட்ட இவ்விளையாட்டு போட்டி இனிதே துஆவுடன் நிறைவு பெற்றது.
Share the post "பாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015"