ரூஸி சனூன் புத்தளம்
புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணிக்கும் கல்பிட்டி பேர்ள்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியில் தண்ட உதையின் மூலமாக கல்பிட்டி பேர்ள்ஸ் அணி வெற்றி பெற்றது.
இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தி வரும் எப்.ஏ. கிண்ணத்துக்கான இந்த கால்ப்பந்தாட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை (15) மாலை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டி நிறைவுபெறும்வேளை இரு அணிகளும் தலா ஒரு கோலினை பெற்று சமநிலை வகித்ததால் வெற்றியை தீர்மாணிப்பதற்காக நடைபெற்ற தண்ட உதையில் 04:02 கோல்களினால் கல்பிட்டி பேர்ள்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், ஏ.ஏ.எம். கியாஸ், எம்.எஸ்.எம். ஜிப்ரி ஆகியோர் கடமையாற்றினர்.
இந்த வெற்றியின் மூலமாக புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கினை மையப்படுத்தி இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் எப்.ஏ. கிண்ணத்துக்காக வரிசைப்படுத்தப்பட்டுள்ள குழுவில் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இந்த குழு இறுதிப்போட்டியில் பேர்ள்ஸ் அணி புத்தளம் நகரின் பலம் வாய்ந்த லிவர்பூல் அணியை எதிர்த்தாடவுள்ளது.
Share the post "இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி"