தேர்தல் முடிவுகள் வெளியாவதைத் தடுத்து அவசர கால சட்டத்தினை அமுல் படுத்துவதன் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள மஹிந்த ராஜபக்ச முயன்ற ‘சதி’ நடவடிக்கை நிரூபணமானால் முன்னாள் ஜனாதிபதியாக அவர் அனுபிவித்து வரும் அனைத்து சலுகைகளையும் இழக்க நேரிடும் என சட்டவல்லுனர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியாக, பாதுகாப்பு,வாகனம் உட்பட உத்தியோகபூர்வ இல்லம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றது. அவற்றை எதுவித தங்கு தடையுமின்றி பெற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச, தனது ஆட்சியின் போது சந்திரிக்காவுக்கு அவற்றை வழங்க மறுத்து வந்திருந்தமையும் அவரை முழுமையாக அரசியலில் இருந்து துரத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Share the post "‘சதி’ நடவடிக்கை நிரூபணமானால் அனைத்து சலுகைகளையும் இழக்க நேரிடும்"