அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் ஆடின.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 342 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகப்பட்சமாக பின்ச் 135 ஓட்டங்களையும், மேக்ஸ்வெல் 66 ஓட்டங்களையும், பெய்லி 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அடுத்து துடுப்பாடிய இங்கிலாந்து அணி 41.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது. அதிகப்படியாக டெய்லர் ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களை பெற்று கொண்ட அதேவேளை அவுஸ்திரேலியா சார்பில் மார்ஷ் 5 விக்கட்டுகளையும் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.
WAK