Puttalam Online
international-affairs

மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்!

  • 17 February 2015
  • 879 views

Husni Haniffasaabooni‘இஸ்லாமிய உலகின் இன்னொரு அறிவுச் சொத்து தனது நீண்ட கல்விப் பயணத்தை முடித்துக் கொண்டு தனது மறுமைப் பயணத்தை நோக்கிய முதலாவது எட்டை தனது 85 ஆவது வயதில் எடுத்து வைத்துள்ளார் இன்னாலில்லாஹி வ இன்னா இலய்ஹி ராஜிஊன். ஆம் செய்க் உஸ்தாத் ஸாபூனி இஸ்லாமிய ஷரீஆவின் பல துறைகளிலும் காலைப்பதித்து பாரிய பங்களிப்புக்களை செய்த இஸ்லாமிய உலகில் மதிக்கப்படும் ஓர் புலமைச் சொத்து குறிப்பாக தப்ஸீர் துறையில் இவரது பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது குறிப்பாக ”ஸப்வதுதபாஸீர்”என்ற அல்குரஆனுக்கான இலகுவான முறையிலான விளக்கவுரை இவரால் இஸ்லாமிய உலகு அடைந்த மிகப் பெரிய முதுசமாகும் குறிப்பாக இலங்கையிலும் பல மத்ர்ஸாக்களில் இந்த நூல் பாட நூலாகப் போதிக்கப்படுவது அந்த நூலின் பெருமதிக்கு எடுத்துக்காட்டாகும் மனிதர்கள் மரணிக்கலாம் அவர்களது உடம்புகள் கூட உக்கிப்போகலாம் ஆனால் அவர்களது சிந்தனைகள் அவர்களது முதுசங்கள் என்றும் உயிர்வாழும் மறுமை வரைக்கும் இவ்வுலகில் ஏதாவது ஒரு மூலையில் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் !

எனவே இறைவா இவரது நற்பணிகளை அங்கீகரித்து அவரது கப்ர் வாழ்வை இலகுபடுத்திக் கொடுத்து உனது மார்கத்துக்கான இவரது இப்பங்களிப்புக்கான தகுந்த சன்மானத்தை வழங்குவாயாக!
ஆமீன்

இவரது மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All