Puttalam Online
kids

அம்மா!!

  • 18 February 2015
  • 464 views

Ala Izma Ikram

அம்மா!! உன் கருவறையில் நானிருந்து உதைத்தது உன்னை நோகடிக்க அல்ல, எட்டு மாதமாய் சுமக்கும் உன் முகம் பார்க்கவே.

பிஞ்சு வயதில் நான் அழுதது, பசியினால் அல்ல, பால் குடிக்கும் சாட்டில் உன் இதயத்தை முத்தமிட..

பள்ளியில் என்னை சேர்க்கும்போது நான் அழுதது பயத்தினால் அல்ல, உன் பாசத்தை பிரிகிறேனோ, என்ற பயத்தினால்…

இளமையில் நான் அழுதது காதலில் கலங்கி அல்ல, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து என்னை பிரிக்குமோ என்ற பயத்தினால்….

நான் வேலைக்காய் செல்லும் போது அழுதது பிரிகிறேன் என்றல்ல, நான் உழைத்து உன்னை பார்க்கப்போகிறேன் என்ற ஆனந்தத்தில்…..

இங்கு தனிமையில் அழுகிறேன், உறவுகள் இல்லாமல் அல்ல உன் தாய் அன்பு காணாமல்……

அம்மா!!! உன் இறப்பின் பின் நான் அழுவேன் நீ இறந்ததால் அல்ல, உலகில் பாசமே இறந்ததால்…….

உனக்கு முன் நான் இறந்தால், அம்மா நீ அழவேண்டாம், என் முடிவில் உன் அழுகை ஆரம்பமாவதை கூட நான் விரும்ப வில்லை  …….

திருடியதில் இதயத்தை திருடியது…

MMM

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All