Puttalam Online
other-news

புதிய அதிபர் சேவை உள்ளீர்ப்பு-2ஆம் வகுப்பு

  • 19 February 2015
  • 656 views

Anbu Javaharsha

திருத்தப்பட்ட புதிய அதிபர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வது தொடர்பான கடிதங்கள் கல்வி அமைச்சால் அனுப்பப்பட்டு வருகின்றது.
.
முன்னர் முதலாம் வகுப்பபில் இருந்த அதிபர்களை திருத்தப்பட்ட புதிய அதிபர் சேவையில் முதலாம் வகுப்புக்கு உள்ளீர்ப்பு செய்த கடிதம்.ஓன்றை எனது முகநூலில் 07.02.2015 அன்று பதிந்து இருந்தேன்.இந்த வாரம் புதிய அதிபர் சேவைக்காக 2ஆம் வகுப்பு உள்ளீர்ப்பு செய்யப்பட்ட கடிதங்கள் கல்வி அமைச்சால் உரியவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

முன்னர் 2-1 தரத்தில் இருந்த அதிபர்களை 01.07.2008 அன்று திருத்தப்பட்ட புதிய அதிபர் சேவையில் இரண்டாம் வகுப்புக்கு உள்ளீர்ப்பு செய்யப்பட்ட கடிதங்களே இவைகளாகும்.இவர்கள் அனைவரும் கடந்த நவம்பரில் நடைபெற்ற முதலாம் வகுப்பு நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவர்கள் முதலில் 01.07.2008 அன்று திருத்தப்பட்ட புதிய அதிபர் சேவையில் உள்ளீர்ப்பு செய்யப்பட்டபின்னரே 01.06.2013,,01.01.2014,,01.06.2014 திகதிகளில் செயல் படும் படியாக முதலாம் வகுப்பு பதவி உயர்வுகள் வழங்கப்பட உள்ளன.இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்னர் 2-1 தரத்தில் இருந்த அதிபர்களை 01.07.2008 அன்று திருத்தப்பட்ட புதிய அதிபர் சேவையில் இரண்டாம் வகுப்புக்கு உள்ளீர்ப்பு செய்யப்பட்டமை தொடர்பாக சில விளக்கங்கள் தரவேண்டியுள்ளது.

திருத்தப்பட்ட புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பில் 17.4 பிரிவில் உள்ளீர்ப்பு செய்யும் நடைமுறை என்ற 17.4.3 உப பிரிவில் பின்வரும் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய தினத்தன்று இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு 2 தரம் 1 ஐச் சேர்ந்த முன்னைய சேவை பிரமாணக் குறிப்பின் 01.07.2008 ஆந் திகதி அன்று இலங்கை அதிபர் சேவையின் வகுப்பு 1 இற்கு பதவி உயர்வு பெறுவதற்கான தகைமை பெற்றுள்ள உத்தியோகஸ்தர்கள் சேவையின் வகுப்பு 1 இற்கும்( 01.07.2008 ஆந் திகதி அன்று வகுப்பு 2 தரம் 1 ல் 5 வருட காலத்தைப் பூர்த்தி செய்த,தகைமை கொண்டவர்கள் இல்லை ),ஏனைய வகுப்பு 2 தரம் 1 ஐச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் அனைவரும் சேவையின் வகுப்பு 2 இற்கும் உள்ளீர்ப்பு செய்யப்படுவர்

17.2.எவ்வாறாயினும் உள்ளீர்ப்புகாரணமாக குறித்த நபரின் சம்பளத்தில் அல்லது சம்பள ஏற்ற திகதியில் மாற்றம் ஏற்படலாகாது .

06/2006(xii) இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கையில் உப அட்டவணை 2 ல் உள்ள வகுப்பு 2 தரம் 1 சம்பளத்துக்கு நேர் ஒத்த சம்பளமானது வழங்கப்பட வேண்டும்.01.07.2008 ஆந் திகதி அன்று 24,225/= பெற்று வந்த அதிபருக்கு 24,995/= என்ற சம்பள நிலை வழங்கப்பட்டு அது தொடரவேண்டும்.ஆகவே யாருக்கும் சம்பளம் குறைய மாட்டது .

இவ்வாறு விரைவில் 2-11,3 ஆம் வகுப்பு அதிபர்களுக்கும் திருத்தப்பட்ட புதிய அதிபர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வது தொடர்பான கடிதங்கள் கல்வி அமைச்சால் அனுப்பப்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All