Puttalam Online
other-news

இலங்கை வாத்தக சங்கம் நடாத்தும் “டேர்னிங் போயின்ட்” செயலமர்வு.

  • 21 February 2015
  • 668 views

(அஸ்ரப் ஏ சமத்)

பிரபல இலத்திரனியல் வர்த்தக ஆலோசகர், சர்வதேச சுயஆளுமை விருத்தி பேச்சாளர், இளம் தொழிலதிபர் இஸ்ரத் இஸ்மாயில் நடாத்தும் இன்ட்நெட் வலையமைப்பின் ஊடாக ஒரு நவீன தொழில்நுட்ப முறையிலான வர்த்தகம் என்ற தலைப்பிலான விசேட செயலமர்வு ஒன்றினை இலங்கை வர்த்தக சங்கம் (சிலோன் சம்பர் ஒப் கொமஸ்) நடாத்தவுள்ளது.

பல நாடுகளிலிருந்து வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இஸ்ரத், வியாபாரங்கள் அடுத்த நல்ல நிலையை அடைய, வணிகம், தொழில்நுட்பம், வணிக நுண்ணறிவு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொழிநுட்பம் சம்மந்தமான  நடைமுறை நுண்ணறிவும், விசேட பாண்டித்தியமும் பெற்றவர் ஆவார்.

Israth Ismailஇஸ்ரத்தின் நிகழ்வுகள், லண்டன் BBC, சவுதி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஈஸ்ட் வெஸ்ட் ஒலிபரப்பு  – இங்கிலாந்து, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனம், ARAB NEWS, எம்டிவி , எம்பிசி நெட்வொர்க் சேனல்கள், சர்வதேச தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் மநாடுகளிலும், உள்ளூர் மற்றும் சர்வதேச சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளார்.

இச்செயலமர்வு எதிர்வரும் 27.02.2015 பிற்பகல் 2.00 – 5.30 மணிவரை  சிலோன் சம்பர் ஒப் கொமஸ் கூட்ட மண்டபத்தில் நடாத்தவுள்ளது.

இந்நிகழ்வில், “இணைய டெக்னாலஜிஸ், யாருக்கும் ஆன்லைன் வர்த்தகம், சமூக மீடியா மற்றும் போக்குகள், ஆன்லைன் முயற்சிகளுக்கு தோல்விகள், மனித வளமும் வேலை படையும், அறிவுப்  பொருளாதாரம், ஆன்லைன் வர்த்தக இடம்பெயர்தல், உங்கள் வர்த்தக உத்தி, பொருட்கள் உருவாக்குதல், அனலிட்டிக்ஸ், இ-கொம்மர்ஸ் & எம்-வியாபாரம், தேடல் பொறிகள் பின்னால், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், தானியக்க வருமான உற்பத்தி, ஆலோசனைகள், வணிக திட்டம் மற்றும் பெரிய தரவு” பற்றிய இன்றைய நாட்களின் முக்கிய விடயங்கள் விளக்கப்படுத்தப் படவுள்ளன.

உள்ளுர் உற்பத்தியாளர்கள், வர்த்தக சமுகத்தினர், சர்வதேச தரத்திற்கு தமது வியாபாரத்தை மேற்கொள்ளுவதற்கும் உலகலாவிய ரீதியில் நவீன தொழில்நுட்ப முறையில் இன்டர்னெட் மற்றும் வெப் வலையமைப்பின் ஊடாக தமது பிசினஸ் முறைமையை முன்னெடுத்துச் செல்வதற்கும் பல்வேறு நாடுகளின் வாத்தக சமுகத்தினரோடு தமது வியாபார தொடர்புகளை மேற்கொள்வதற்கும் சிறந்ததொரு வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கும்  இச்செயலமர்வு மிகவும் பயனலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன் நிகழ்விற்கு சிறு கைத்தொழிலாளார்கள், பெரும் உற்பத்தியாளர்கள், சேவை வியாபாரம் செய்பவர்கள், வர்த்தக துறையில் (RETAIL பிசினஸ் OWNERS), சுற்றுலா துறையிலுள்ளவர்கள், சந்தைப்படுத்துனர், வர்த்தக முகாமையாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் வர்த்தக முகாமைத்துவ துறை சார்ந்த மாணவர்களும்  ஏனையோறும் பங்குபற்றலாம்.

இக் கருத்தரங்கில் பங்கு பற்ற விரும்புபவர்கள்  மேலதிக தகவல்களுக்கு: 0114 386 596 / 0114 386 597 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இஸ்ரத் இஸ்மாயில் கல்முனை சாஹிரா கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும், லண்டன் கிழக்கு பல்கலைகழகத்தின் உயர் பட்டதாரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All