Puttalam Online
other-news

மாணவர்களிடம் பணம் அறவிட்ட அதிபர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன

  • 22 February 2015
  • 550 views

அஸ்ரப் ஏ சமத்

technology_meeting2சில அதிபர்கள் பாடாசலைகளில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும்போது பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களை வைத்து பணம் வாங்குகின்றனர். இதனை 2015-15 என்ற சுற்றரிக்கையின் மூலம் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வியமைச்சில் தேசிய பாடசாலைகள் அதிபர்கள் 255 பேரை கல்வியமைச்சர் சந்தித்தார். இச் சந்தர்ப்பத்தில் மேற்படி பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது அன்பளிப்புக்களையோ பணங்களையோ அதிபர்கள் அறவிடுவது சட்ட விரோதமாகும். அவ்வாறான அதிபர்கள் பற்றி முறைப்பாடு கிடைப்பின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்தார்.

பிரபல்யமிக்க பாடசாலைகளில் பழைய மாணவர்களை அல்லது கல்லூரி அபிவிருத்திக் குழு உறுப்பினர்களை பாடசாலைக்குள் உள்வாங்கி அவர்களுக்கு விளையாட்டுக் கோச் என நியமிக்கின்றனர். அல்லது அவர்கள் சிரமதானம், பாடசாலைகளது நிர்மாணப்பணிகளை செய்பவர்கள் என நியமிக்கின்றனர். பாடாசலையில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும்போது இவர்கள் ஊடாக பெற்றோர்களிடம் அன்பளிப்புக்கள் பணம் அறவிடப்படுகின்றமை தெரியவந்துள்ளது. பாடசாலையின் அனுமதி விடயத்தில் பழைய மாணவர்கள் சம்பந்தப்படுகின்றனர்.

தமது கல்லூரியில் கற்ற பழைய மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் ஏதாவது அன்பளிப்பு வழங்கின் அதனை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதுபற்றிய கல்வித் திணைக்களத்திற்கோ அல்லது மாகாணக் கல்வியமைச்சிடம் தெரியப்படுத்தல் வேண்டும். அப் பொருட்கள் சொத்துக்கள் அரச சொத்துக்கள் பதிவேட்டில் பதியப்படல் வேண்டும்.

5-6 ஆயிரம் மாணவர்கள் உள்ள பாடாசலைகளில் இந்தப் பிரச்சினை உள்ளது. இவ்வாறான தகவல்களை சேகரித்து வருகின்றோம். மாணவர்களிடமிருந்து ஒருபோதும் பாடசாலைக்காக நேரடியாக அன்பளிப்பை பெற முடியாது. சகல அபிவிருத்திகளும் கல்வியமைச்சுக்கு தெரியப்படுத்தல் வேண்டும்.

சில பாடசாலைகளின் வருடாந்தம் மில்லியன் ரூபா கணக்கில் பணம் அறவிடப்படுகின்றன. ஆகக் குறைந்தது ஒரு மாணவனிடமிருந்து 20ஆயிரத்தை அறிவிடுகின்றனர். சுமார் 7ஆயிரம் மாணவர்கள் உள்ள பாடாசலையில் இப் பணம் 100 மில்லியன் ரூபாவாக அறவிடப்படுகின்றது. கடந்த காலங்களில் கல்லூரியில் ஜனாதிபதி ஒருவர் அல்லது ஒரு பிரமுகவர் வருகை தருவாராயின் அதற்காக பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலையில் மில்லியன் கணக்கில் பணம் அறவிடப்பட்டு பாடசாலையில் உள்ள சுற்றுமதில் அமைத்தல், அதிபருக்கு வாடகைக்கு வாகனம், கல்லூரியில் உள்ள வகுப்பறைகளுக்கு பெற்றோர்களை அழைத்து வர்ணம் பூசுதல் ஆனால் கல்வியமைச்சில் இருந்து பணம் பெறப்படுகின்றது போன்ற நடவடிக்கைகளிலும் கல்லூரி நிர்வாகம் தண்னிச்சையாக செயல்படுகின்றன.

பாடசாலைகளின் கட்டுமாணப்பணிகளுக்கு கல்வியமைச்சு கட்டாயம் வரவு செலவுத்திட்டத்தில் இருந்து நிதி வழங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All