Puttalam Online
uncategorized

புத்தளத்துப் புதையல்கள் – ஓர் அறிமுகம் எமது மரபுரிமையை நாம் பாதுகாப்போம்

  • 28 March 2015
  • 775 views

புத்தளம், வரலாற்றும் பெருமைமிகு புகழ்பூத்த பிரதேசமாகும். எமக்கென்று ஒரு மரபுரிமையுண்டு. ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு ஓரளவு உண்டு.  தனித்துவமிக்க கலாசாரம், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், உள்ளன. எமது பேச்சு வழக்கு தனித்தன்மைமிக்கது. நம் முன்னோர் எமக்களித்த அருஞ் செல்வங்கள் அவை.

புத்தளத்தின் பெளதிக, பண்பாட்டு சூழல்கள், பழக்க வழக்கங்கள் விரைவாக மாறிவருகின்றன. சிலவற்றை நாம் இழந்து நிற்கின்றோம். அதன் அருமை பெருமை புரியாமல் தொலைத்தும்விட்டோம்.

சனத்தொகை விரிவாக்கம்,நவீன தொழில்நுட்ப வளர்ச்சி,உலகமயமாக்கல், இடப்பெயர்வுகள், ஏனைய கலாசார பண்பாட்டுத் தாக்கங்கள், காரணமாக எமது தனித்துவத்தை நாம் படிப்படியாக இழப்பது எமக்குப் புரிவதில்லை. மரபுரிமைச் சொத்துக்களில் மறைந்திருக்கும் பெறுமானங்கள் எமக்குத் தெரிவதில்லை. வரலாற்று ஆதாரங்களின்றி பல சமூகங்கள் தவித்து நிற்கின்றன .

நமது வரலாறும் மரபுரிமையும் நம்முடையவை. எமது பயணத்தின் அடுத்த அடியை சரியாக எடுத்துவைக்க அவை துணைபுரிபவை. சரி பிழையை பிரித்தறிய அவை எமக்குத் தேவை. எமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அவசியமானவை. சமூகப் பிரச்சினைகளின் தீர்வுக்கும் வழிகாட்டக் கூடியவை. வரலாற்றை மறந்த சமூகம் தலையற்ற முண்டமே. எமது மரபுரிமையே எமது எதிர்காலமாகும்.

நமது மரபுரிமைகள் நாளைய சந்ததியினருக்குச் சென்றடைய வேண்டும் என்ற நன்நோக்கில் “புத்தளத்துப் புதையல்கள்” என்ற இத் தொடர் மர்ஹூம் AMM ஹனீபா ஆசிரியரின் குறிப்புக்களில் இருந்து ஆரம்மாகின்றது.

புதையல்கள் தோண்டப்படும் …


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All