Puttalam Online
historical-notes

புதையல் 2 : போல்ஸ் வீதி (POLES ROAD ) : பெயர் எவ்வாறு வந்தது என்பதை அறிவீர்களா?

புதையல்    2
போல்ஸ்  வீதி (POLES ROAD)

Pole என்றால் கம்பம். புத்தளம் நகரில் தற்போதைய தபால் நிலைய சந்தியில் இருந்து வலது இடது புறமாக இரு வீதிகள் செல்கின்றன. வலப்புறம் செல்லும் பாதை போல்ஸ் வீதி. அதில் பாத்திமா கல்லூரி தற்போது அமைந்துள்ளது. இடப்புறம் செல்வது Fort Road (கோட்டை வீதி). இதில் வாடி வீடு, சிறுவர் பூங்கா போன்றன அமைந்துள்ளன.

 20150402_064723

தற்போது மக்கள் வங்கி அமைந்திருக்கும் சந்தியில் இவ்விரு வீதிகளைக் குறிக்கும் பெயர்ப் பலகைகளும் முன்பு இருந்தன. தற்போதைய  சுற்று வளைவு சந்திகள் அப்போது இல்லை.

ஆரம்பத்தில் போல்ஸ்  வீதிக்குக் கிழக்குப் பகுதியிலேயே நகரக் குடியிருப்பு அமைந்திருந்தது.(கண்கானிக் குளம் , இரண்டாம் குறுக்குத் தெரு என்பன அமைந்துள்ள பகுதிகள்). மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதி வெள்ளத்தில் மூழ்காதிருக்க போல்ஸ்  வீதி இருக்கும் இடத்தில்  அணை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த அணையின் மீது அமைக்கப்பட்டிருந்த வீதியே போல்ஸ்  வீதியாகும். இது ஓர் உயரமான இடத்தில் இருப்பதனையும் நாம் அறிவோம். இவ் வீதி திரன வீதி (திறன அணை ) என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.

20150402_063848

மறு புறம் கோட்டை வீதி அமைந்திருந்தது. “புத்தளம் கோட்டை” தற்போது நில அளவைத் திணைக்களம் இருக்கும்  பகுதியில் அல்லது அதற்கு சற்று அப்பால் அமைந்திருந்தது. கோட்டைக்கு செல்லும் வீதியே கோட்டை வீதியாகும். குடியிருப்புக்களோ கட்டிடங்களோ இல்லாது பரந்த வெளியாகக் காணப்பட்ட இப் பிரதேசத்தில் தற்போதைய ஹுதாப் பள்ளிக்கு வலது புறம் நெடுங்குளத் தரவையில்  நின்று பார்க்கும் போது கோட்டையில் ஏற்றப்பட்டிருக்கும் கொடிக்கம்பம் (Pole) தெரியுமாம். எனவே அணையில் அமைக்கப்பட்டிருந்த வீதி POLES வீதி எனப் பெயர் பெற்றது.

(இது ஹனீபா ஆசிரியரின் குறிப்புக்களில் இருந்து முழுமையாகப் பெறப்பட்டு பதிவிடப்படவில்லை)

20150402_07473320150402_074713

புத்தளம் கோட்டையின் வரைபடம் –  Puttalam Map – 1892

 

புதையல்கள் தோண்டப்படும் . . .

குறிப்பு : இப் பதிவு தொடர்பான மேலதிக விபரங்கள், இங்கு குறிப்பிடப்படும் நபர்கள், நிகழ்வுகள், ஆண்டுகள், போன்றன தெரிந்திருப்பின், வெளிப்படுத்தி எமது எதிர்கால புத்தளம் சந்ததிக்கு உதவுங்கள்.

e mail: puttalamonline@yahoo.com


2 thoughts on “புதையல் 2 : போல்ஸ் வீதி (POLES ROAD ) : பெயர் எவ்வாறு வந்தது என்பதை அறிவீர்களா?

  1. Harshi Arulappa says:

    **great grand daughter’s of

  2. Harshi Arulappa says:

    I am one of the great grandfathers of Gate Mudliyar Paul De Costa. He who is the one gifted Juse Vaz center. Now the John Paul English school. Senadhiraja who gifted st. Andrews and st. Andrews primary is also our relatives. To my knowledge even the POLES Road was named after my great grandfather. Paul’s Road became POLES Road. That is the history I came to know from my uncle who also was a leading lawyer in Puttalam for many years. I remember my uncle saying that his grandfather studied in Colombo so he use to travel by a ” Paruwa” to Colombo. He used the Dutch Canal. I can get more details of POLES Road etc from my relatives.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All