Puttalam Online
regional-news

புத்தளம் சாஹிராவின் 62% மாணவர்களைப் பாராட்டுவோம்.!

  • 3 April 2015
  • 583 views

Muhusi Rahmathulla
அண்மையில் வெளியாகிய G.C.E.O/L பரீட்சைப் பெறுபேறுகளின் படி புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் 62% சதவீத மாணவர்கள் G.C.E.A/L கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய 188 மாணவர்களில் 113 பேர் இவ்வாறு சித்தி பெற்றுள்ளனர். இதே வேளை இவ்வருடம் சித்தியடைய தவறிய 75 மாணவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ஆர்வமுள்ள பலரை மீண்டும் பரீட்சைக்குத் தோற்றச் செய்வது ஒரு தெரிவாக இருக்க முடியும். அத்துடன் பல்வேறு தொழில் சார் கற்கை நெறிகளின் பால் இவர்களை ஈடுபடுத்தும் வகையில் வழிகாட்டல் செயலமர்வுகளை நடத்துவது, அவர்களை அது போன்ற கற்கை நெறிகளில் இணைத்து விடுவது, இதற்காக பொருளாதார வசதியின்றி இருப்பவர்களுக்கு முடிந்த வரை உதவுவது, உதவி வழங்கும் நிறுவனங்களை காண்பித்து கொடுப்பது என்பன அடுத்ததொரு தெரிவாக இருக்க முடியும்.
இந்தப் பணிகள் குறித்து பழைய மாணவர் அமைப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் இவ்வாறு சித்தியடைய தவறிய மாணவர்களுக்கு தமது எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை அவர்களின் உள்ளங்களில் விதைக்க முடியும். அது போல சித்தி பெற்றவர்களைப் பாராட்டுவது, G.C.E.A/L இல் பொருத்தமான துறைகளைத் தெரிவு செய்வது மற்றும் அது எத்தகைய உயர் கல்வித் துறைகளுக்கு இட்டுச் செல்லும் முதலானவைப் பற்றியும் விழிப்பூட்டல் வழங்க முடியும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All