Puttalam Online
historical-notes

புதையல் 4 : காலை (Galle) – GALLE என்பதன் அர்த்தம் இப்போது உங்களுக்குப் புரியும்

  • 12 April 2015
  • 1,002 views

புதையல் 4 :

காலை (Galle)

தற்போது ஹுதா பள்ளி அமைந்துள்ள இடமே, முன்னர் “காலை” ஆக இருந்தது.

அதாவது இங்கு ஒரு விசாலமான தகரக் கொட்டகை இருந்தது. தரை சீமெந்தால் தளமிடப்பட்டிருன்தது. நாட்டுப் பகுதியில் (கிராமம்) இருந்து வைக்கோல் ஏற்றி வரும் வண்டிகள் இங்கே அவிழ்க்கப்படும். மாடுகள் இங்கு கட்டப்படும். இதைத்தான் “காலை” என்று அழைத்தனர்.

இதனால்தான் தற்போதைய பாத்திமா மகளிர் கல்லூரி அக் காலத்தில் “காலை ஸ்கூல்” என்று வழங்கப்பட்டது. இந்த வீதியும் கூட “காலை ரோட்” என்று அழைக்கப்பட்டு வந்தது.

இங்குள்ள பாலம் (மரைக்கார் வீதியில்) இன்றும் “காலைப் பாலம்” என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. அக் காலத்தில் மாடு கட்டும் மடுவமாக இருந்த இடத்தில் இன்று “மஸ்ஜிதுல் ஹுதா” அமைந்துள்ளது.

(மர்ஹூம் AMM ஹனீபா ஆசிரியரின் குறிப்புக்களைத் தழுவி எழுதப்பட்டது)

ph-10286 ph-10287ph-10398

புதையல்கள் தோண்டப்படும். . .

குறிப்பு : இப் பதிவு தொடர்பான மேலதிக விபரங்கள், இங்கு குறிப்பிடப்படும் நபர்கள், நிகழ்வுகள், ஆண்டுகள், போன்றன தெரிந்திருப்பின், வெளிப்படுத்தி எமது எதிர்கால புத்தளம் சந்ததிக்கு உதவுங்கள்.

e mail: puttalamonline@yahoo.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All