Puttalam Online
other-news

வெளிநாடுகளில் தொழில் புரிவோர் நலனில் அரசாங்கம் போதிய கவனம் காட்டவில்லை

  • 19 April 2015
  • 655 views

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

இந்த நாட்டின் மொத்த வெளிநாட்டுச் செலாவணியில் கணிசமான பகுதியை மத்திய கிழக்கில் தொழில் புரிவோரே உழைக்கின்றார்கள், சுமார் ஏழு பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பற்றக்குறையை ஈடு செய்வதில் அவர்களது வைப்புக்கள் கணிசமான பங்களிப்பினை செய்கிறது.

ME555இலங்கையின் மொத்த சனத்தொகையில் 25% வெளிநாட்டில் உழைக்கின்றார்கள் அவர்களில் 40% பெண்கள், ஆனால் இவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் அரசாங்கங்களின் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றே கூறலாம்.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, எகிப்து, இந்தியா, பாகிஸ்தான், சூடான் உற்பட பலநாடுகள் மிகவும் தெளிவான உடன்பாடுகளை மத்திய கிழக்கு நாடுகளுடன் செய்து கொண்டுள்ளனர்.

மத்தியகிழக்கு தூதுவராலயங்களில் இருக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளில் ஒரு சிலருக்காவது அறபு மொழியில் பரிட்சயம் இருத்தல் வேண்டும், குறிப்பாக தொழிலாளர் நலன் பேணும் உத்தியோகத்தர்களுக்கு அறபு மொழி மற்றும் குறிப்பிட்ட நாட்டின் சட்டதிட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். அந்த தொளிலார்களே அவர்களை சௌகரியமாக வாழ வைத்திருக்கின்றார்கள்.

அறபு நாடுகளில் உள்ள அத்தனை தூதுவராலயங்களும் தொழிலாளர் நலன் பேணவே ஸ்தாபிக்கப்பட்டன, பல பில்லியன்கள அவற்றிற்காக செலவிடப்படுகின்றன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நூற்றுக்கணக்கான நிரந்தர உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள் 99% அறபு மொழி தெரியாது, பணியகத்திலும், தூதுவராலயங்களிலும் நிரந்தரமற்ற ஒப்பந்த அடிப்படையிலான உத்தியோகத்தர்களே மிகக் குறைந்த கொடுப்பனவுகளுடன் அறபு மொழி பெயர்ப்பாளர்களாக பணி புரிகின்றார்கள். மிக அண்மையில் ஒரு சிலரை நிரந்தர உத்தியோகத்தர்களாக ஆக்கியுள்ளனர்.

வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு சட்ட உதவிகள் பெற்றுக் கொடுக்க நிதியம் ஒன்று இல்லை, அல்லது போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை, மொழி பெயர்ப்பாளர்களே சட்டத்தரணிகளின் அலுவல்களை பார்க்க வேண்டும். உதாரணமாக சகோதரி றிசான நாபிக் அவர்களுக்கான சட்ட உதவிகளை தனியார் நிறுவனம் ஒன்றே பெற்றுக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது.

சகோதரி றிசான நாபிக் அவர்களை காப்பாற்றவென பல தூதுக்குழுக்க புறப்பட்டுச் சென்று வந்தன அவர்களுக்கான செலவு சுமார் ஐந்து மில்லியன்களையும் தாண்டியிருக்கலாம், ஆனால் தேவைப்பட்ட பொழுது சுமார் மூன்று மில்லியன்களை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் சட்ட ஏற்பாடுகள் இருக்க வில்லை காசும் வழங்கப்படவில்லை.

இவர்கள் புறப்படும் பொழுது செய்து கொள்ளும் காப்புறுதி காப்புறுதி நிறுவனங்களையே வளர்த்துவிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள முகவர்கள் விடயத்திலும் போதிய கவனம் செலுத்தப்படல் வேண்டும், பொறுப்புக்கூறல், காசு கொடுக்கல் வாங்கல், வெளிப்ப்டைத்தன்மை என இன்னோரன்ன விவகாரங்களில் கண்டிப்பான சட்டங்கள் கொண்டு வரப்படல் வேண்டும்.

நிதியமைச்சும், வெளிநாட்டமைச்சும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து சில அரபு தெரிந்த சட்டத்தரணிகளை, பட்டதாரி அறபு மொழி பெயர்ப்பாளர்களை தெரிவு செய்து மத்திய கிளைக்கு நாடுகளில் உள்ள சட்டதிட்டங்கள் குறித்த பயிற்சிகளை வழங்கி அவர்களை நிரந்தர இராஜ தந்திர படித்தற உத்தியோகத்தர்களாக உள்வாங்க வேண்டும்.

இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்ய அரசு தயாரெனில் அதற்குரிய பூரண ஒத்துழைப்பை மனிதாபிமான அடிப்படையில் பிரதி உபகாரம் பாராது வழங்க நாங்கள் ஒரு சிலர் தயாராக இருக்கின்றோம்.

ஜித்தாவில் கொன்ஸல் ஜெனரலாக கடமை புரிந்த பொழுது, கடமை நேரத்திற்கு பின்னரும் இரவு பகலாக நாங்கள் நேரடியாகவே சட்ட விவகாரங்களை கையாளவும் அதேபோல் தொழில் வழங்குனர்களுடன் பிணக்குகளை சுமுகமாக அழைத்துப் பேசி தீர்க்கவும் அறபு மொழி மற்றும் ஷரீஅத் சட்ட அறிவு தனிப்பட்ட முறையில் எனக்கு உதவியது.

அவர்களது இன்னல்கள் கண்டு இறுதியில் மனஅழுத்த நோயுடனேயே நாடு திரும்பும் நிலை ஏற்பட்டது, குறிப்பாக இந்த நாட்டில் இருந்து பெண்கள் தொழிலுக்காக கடல் கடந்து சென்று அனுபவிக்கும் அவலங்கள் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாதவை, எங்களை விட வறுமையான பங்களாதேஷ் கூட பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை.

வெளிநாடுகளுக்கு பயிற்ருவிக்கப்பட்ட தொளிலார்களாக செல்ல விரும்பும் மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு ஆர்வமுள்ள, சந்தைக்கு தேவைப்படுகின்ற தொழில் கல்விகளை, தொழில் நுட்ப ,உயர் தொழில் நுட்ப கல்விகளை அரசு வழங்குவதற்கு அவர்கள் உழைக்கும் வெளிநாட்டுச் செலாவணி போதுமானதாகும்.

அன்று என்னுடன் பணிபுரிந்த தொழில் அமைச்சின் இரண்டாவது செயலாலர் திரு பத்திரத்ன, மொழிபெயர்ப்பாளர்களான ஷெய்க் நளீர், ஷெய்க் ஷிப்லி, ஷெய்க் தில்ஷாத், பொதுசன உறவுகள் அதிகாரி சகோதரர் முபாறக் போன்றோர் மிகப் பெரிய அர்ப்பணிப்புடன் என்னுடன் பணியாற்றியமை மறக்க முடியாது.

வெளிநாடுகளில் தொழில் புரியும் சகோதர சகோதரிகளின் நலன்கள் குறித்து இந்த அரசு கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும், அவர்களது உரிமைகள், சலுகைகள், சட்ட உதவிகள், அவர்களது குடும்பங்களின் சேம நலன்கள் குறித்து தெளிவான சட்டவலுவுள்ள தொழிலார் சாசனம் வரையப்பட்டு பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படல் வேண்டும்.

மத்தியகிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர் அமைப்புக்கள் தமக்குள் ஒரு தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு தமது உரிமைகள் சலுகைகள், சட்ட உதவிகள் மற்றும் ஏனைய நலன்கள் விடயத்தில் அவ்வப்போது, அரசின் கவனத்தை ஏற்க வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All