Puttalam Online
kids

மாப்பிசைவைக் கொண்டு (Play Dough) விளையாடலில் உள்ள பயன்கள். KEC

  • 21 April 2015
  • 870 views

மாப்பிசைவைக் கொண்டு (Play Dough) விளையாடலில் உள்ள பயன்கள்.

உடல் உறுப்புக்களின் தசைகளை சிறப்பாக இயங்க வைக்கும். சிறு கரங்களில் உள்ள தசை எலும்புகளை வலுப்பெறச் செய்யும். பிசைதல், பிழிதல், உருட்டுதல், தட்டையாகுதல் போன்ற செயற்பாடுகளை செய்யும் பொழுது சிறுவர்களின் தசைகளை அபிவிருத்தி அடையச்செய்வதோடு எழுதப் பழகுமுன்னரான திறன்களைச் செய்ய ஊக்கமளிக்கின்றது. ஏனைய திறன்கலான கத்தரிக் .கோலினால் வெட்டுதல், சாமனத்தினால் இழுத்தல்,பென்சில் ஒன்றைப் பிடித்தல் போன்றவற்றுக்கும் உதவுகிறது. இது கையாளும் பொருட்களிலோ, விடையங்களிலோ கவனத்தை ஈர்த்து சிந்தனைப் பதிவை ஏற்படுத்துகிறது. சிறார்களின் மனவெழுச்சியை வெளிப்படுத்த அவை உந்து சக்தியாகும். பதிவை ஏற்படுத்துகிறது. சிறார்களின் மனவெழுச்சியை வெளிப்படுத்த அவை உந்து சக்தியாகும்.

Kid-Playing-with-playdough

ஆக்கத்திறனும் கற்பனையும்

குழந்தைகள் தாம் காண்பவை, அவதானிப்பவை என்பவற்றை கற்பனை செய்வர். அவர்கள் கேக் (Cake), பிஸ்ஸா(Pizza), வீடுகள், மிருகங்கள் முதலியவற்றை உருவாக்குகின்றனர். சிறுவர்களுக்கு மாப்பிசைவுடன் வெவ்வேறு வகையான பொருட்களை வழங்கும்பொழுது அவர்களின் உருவாக்கும் சக்தியும், கற்பனைத் திறன்களும் உந்து சக்தியாக அமையும். கைகள், கண்கள் சமமாக இயங்கும் தன்மை அபிவிருத்தியடையும். பிசைவுக்களியுடன் பல்வேறு பொருட்கள் வழங்கப்படும் போது மேற்படி அபிவிருத்தி மேன்மையடையும்.

சமூக திறன்கள்

எவ்விதமான செயற்பாடுகளிலும் சிறுவர்கள் பங்குபற்றும்போது அவர்கள் தமது சமூகத்துடன் பழகும் திறன்கள் வளர அற்புதமான சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. சிறு குழுக்களுடனோ அல்லது பெரியவர்களுடனோ மாப்பிசைவுடன் (Play Dough) விளையாடும்போது தம்முடன் பேசிக்கொள்ளவோ, கலந்துரையாடிக்கொள்ளவோ ஒன்றிணைந்து விளையாடவோ ஏராளமான சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், திட்டமிடல் போன்ற கைங்கரியங்களும் அவற்றுள் அடங்கும்.

Mrs. Asmara Azhar,

KEC

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All